அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை…

தினம் ஒரு ஹதீஸ்-524

حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنِي عَمْرٌو يَعْنِي ابْنَ أَبِي عَمْرٍو، عَنْ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رُبَّ صَائِمٍ حَظُّهُ مِنْ صِيَامِهِ الْجُوعُ وَالْعَطَشُ، وَرُبَّ قَائِمٍ حَظُّهُ مِنْ قِيَامِهِ السَّهَرُ  
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 8856

"எத்தனையோ நோன்பாளிகள், தங்களின் நோன்பினால் பசியையும், தாகத்தையுமே தனது பங்காக பெறுகின்றனர். (அவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை). இன்னும் இரவில் (கண்விழித்து) நின்று வணங்கும் எத்தனையோ பேர், தங்களின் இரவு வணக்கத்தால் இரவில் கண்விழித்திருந்ததையே தனது பங்காக பெறுகின்றனர். (அவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 8856

It was narrated from Abu Hurairah (ra) that the Messenger of Allah (sal) said: `There are people who fast and get nothing from their fast except hunger, and there are those who pray and get nothing from their prayer but a sleepless night.
[Ahmad 8856]

நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவுகள்: 
Blogger Widget

வழிகெடுக்கும் நயவஞ்சகன்...

தினம் ஒரு ஹதீஸ்-518

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا دَيْلَمُ بْنُ غَزْوَانَ، عَبْدِيٌّ حَدَّثَنَا مَيْمُونٌ الْكُرْدِيُّ، حَدَّثَنِي أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ‏ 
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 143

"என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)
நூல்: அஹ்மத் 143

It was narrated from Umar bin al Khattab (ra) that the Messenger of Allah (sal) said: `The thing I fear most for my Ummah is every hypocrite who speaks with knowledge
[Ahmad 143]

தொடர்புடைய பிற பதிவு: நயவஞ்சகனின் குணங்கள்…
Blogger Widget

சகுனம் பார்த்து நாடிய காரியத்தைச் செய்யாது விட்டால்...

தினம் ஒரு ஹதீஸ்-503

حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ أَخْبَرَنَا ابْنُ هُبَيْرَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَدَّتْهُ الطِّيَرَةُ مِنْ حَاجَةٍ فَقَدْ أَشْرَكَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا كَفَّارَةُ ذَلِكَ قَالَ أَنْ يَقُولَ أَحَدُهُمْ اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُكَ وَلَا طَيْرَ إِلَّا طَيْرُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ 
6748 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ

ஒருவர் சகுனம் பார்த்து தான் நாடிய காரியத்தைச் செய்யாது பின்வாங்கினால் அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அதற்குப் பரிகாரம் என்ன? எனத் தோழர்கள் வினவினர். "அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ கைருக்க" (யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை; உன் சகுனமின்றி வேறு சகுனமில்லை; உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை) என கூறுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் 6748

Abdullah ibn Amr (ra) reported:
The Messenger of Allah (sal) said: Whoever lets tiyarah stop him from doing something is guilty of shirk.” They said, “What is the atonement for that?” He said, “To say: Allaahumma la khayra illaa khayruka wa laa tayra illaa tayruka wa laa ilaaha ghayruka (O Allah, there is no good except Your good, no omens except from You, and there is no god beside You).
[Ahmad 6748]
Blogger Widget

இனவெறி , நிறவெறிக்கு இஸ்லாத்தில் இடமில்லை..

தினம் ஒரு ஹதீஸ்-500

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ ، عَنْ أَبِي نَضْرَةَ ، حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ ، أَلاَ إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ ، أَلاَ لاَ فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ ، وَلاَ لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ ، وَلاَ أَحْمَرَ عَلَى أَسْوَدَ ، وَلاَ أَسْوَدَ عَلَى أَحْمَرَ ، إِلاَّ بِالتَّقْوَى أَبَلَّغْتُ ، قَالُوا : بَلَّغَ رَسُولُ اللهِ ، ثُمَّ قَالَ : أَيُّ يَوْمٍ هَذَا ؟ قَالُوا : يَوْمٌ حَرَامٌ ، ثُمَّ قَالَ : أَيُّ شَهْرٍ هَذَا ؟ قَالُوا : شَهْرٌ حَرَامٌ ، قَالَ : ثُمَّ قَالَ : أَيُّ بَلَدٍ هَذَا ؟ قَالُوا بَلَدٌ حَرَامٌ ، قَالَ : فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ : وَلاَ أَدْرِي قَالَ : أَوْ أَعْرَاضَكُمْ ، أَمْ لاَ ـ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا ، فِي شَهْرِكُمْ هَذَا ، فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ ، قَالُوا : بَلَّغَ رَسُولُ اللهِ ، قَالَ : لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِب
22978 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (விடைபெறும் ஹஜ்) யாத்திரையின் (இறுதி)நாளின் நண்பகல் நேரத்தில், "மக்களே! உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் (ஆதம் (அலை))  ஒருவரே. ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர". என்று மக்களுக்கு உரையாற்றிய பின்பு, நான் உங்களுக்கு தூதுச்செய்தியை எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்து விட்டார் எனக் கூறினார்கள். 
பிறகு மக்களிடம் “இது எந்த நாள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது புனிதமிக்க தினமாகும்!" என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம்?” என்று கேட்க மக்கள், “இது புனிதமிக்க மாதமாகும்” என்று பதிலளித்தார்கள்.பிறகு, நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நகரம்?” என்று கேட்க மக்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!” என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள். பிறகு, "(அல்லாஹ் எனக்கு அருளிய) தூதுச்செய்தியினை நான் உங்களுக்கு நிச்சயமாக அறிவித்து விட்டேன். நான் உங்களுக்கு தூதுச்செய்தியை எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபி (ஸல்) அவர்கள் கேட்க, மக்கள், அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்து விட்டார் எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூநத்ரா  (ரலி)
நூல்: அஹ்மத் 22978

Abu Nadrah (ra) reported:
The Messenger of Allah (sal) said during the middle of the day at the end of the pilgrimage, “O people, your Lord is one and your father (Adam (alai)) is one. There is no favor of an Arab over a non-Arab, nor a non-Arab over an Arab, and neither white skin over black skin, nor black skin over white skin, except by righteousness. Have I not delivered the message?” They said, “The Messenger of Allah has delivered the message.” 
Then the Prophet (sal) asked: "Which day is this?" They replied: "A sacred day." The Prophet (sal) asked: "Which month is this?" They replied: "A sacred month." The Prophet (sal) asked: "Which town is this?" They replied: "A sacred town." then The Messenger of Allah (sal) said, "No doubt, Allah made your blood, your properties, and your honor sacred to one another like the sanctity of this day of yours in this month of yours in this town of yours. Verily! I have conveyed this message to you. "Have I delivered the message? They said: "The Prophet (sal) has delivered the message." The Prophet (sal) said: "May those who are present inform those who are absent."
[Ahmad 22978]
Blogger Widget

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் -10

தினம் ஒரு ஹதீஸ்-492

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِمْتُ فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَاكَ الْبِرُّ كَذَاكَ الْبِرُّ وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ 
24026 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ

(ஒருநாள்) தூக்கத்தின் போது கனவில் சொர்க்கத்தில் என்னை நான் கண்டேன். அப்போது ஒருவர் ஓதும் குரலை (சொர்க்கத்தில்) செவியுற்றேன். இவர் யார்? என்று நான் கேட்டபோது, இவர் ஹாரிஸா பின் நுஃமான் என்று அவர்கள் பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நன்மை (யின் கூலி) இவ்வாறுதான். நன்மை (யின் கூலி) இவ்வாறுதான்", ஹாரிஸா அவர்கள் தான் மக்களிலேயே தம் தாயாருக்கு அதிக சேவையாற்றுபவர்களாக இருந்தார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா  (ரலி)
நூல்: அஹ்மத் 24026

Aisha (ra) reported:
The Messenger of Allah (sal) said: “I slept and I dreamt that I saw myself in Paradise, and I heard the voice of someone reciting. I said: ‘Who is this?’ They said: ‘This is Haarishah bin Nu‘maan.’” And the prophet (sal) said: “That is because of kindness, That is because of kindness” And he was the one who honored his mother the most among the people
[Ahmad 24026]

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண இங்கேயும்பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

அழகிய முன் மாதிரி -11

தினம் ஒரு ஹதீஸ்-484

حَدَّثَنَا يَزِيدُ ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ ، عَنْ شُعَيْبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِيهِ ، قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مُتَّكِئًا قَطُّ ، وَلَا يَطَأُ عَقِبَهُ رَجُلَانِ 
6371 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ, அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் 6371

Abdullah ibn Amr (ra) reported:
The Messenger of Allah (sal) was never seen reclining while eating, nor walking with two men at his heels.
[Ahmad 6371]
அழகிய முன் மாதிரி சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1234567, 89,10
Blogger Widget

நிராகரிக்கப்படும் பித்அத்...

தினம் ஒரு ஹதீஸ்-469

அல்லாஹ்வும், அவனது தூதரும் மார்க்கமாக்கிய செயல்களைத் தவிர்த்து வேறு செயல்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வது பித்அத் எனப்படும், மார்க்கத்தில் அனைத்து அமல்களும் கூறப்பட்டு விட்டன. அதனை விடுத்து மார்க்கம் என்ற பெயரில் நாமாக தொழுகை, நோன்பு போன்ற செயல்களை மார்க்கத்தில் உள்ளது போல் செய்தாலும் அது அல்லாஹ்விடம் நிராகரிக்கப்பட்டு விடும், அதற்கு எந்த நன்மையும் கிடைக்காது, மேலும் அது நரகத்திலும் சேர்த்து விடும்.

حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ 
‎2697 ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ، سَمِعَ الْقَاسِمَ ، قَالَ : سَمِعْتُ عَائِشَةَ ، تَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا  فَهُوَ رَدٌّ
24903  ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ
யார் நமது (மார்க்க) விஷயத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது (அல்லாஹ்வால்) நிராகரிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
”நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கமெனக் கருதி) யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்வால்) நிராகரிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 24903
Aisha (ra) reported that Allah’s Messenger (sal) said: If somebody innovates something which is not in harmony with the principles of our religion, that thing is rejected." 
[Bukhari 2697]
Aisha (ra) reported that Allah’s Messenger (sal) said: He who did any act for which there is no sanction from our behalf, that is to be rejected.
[Ahmad 24903]

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5:3
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 49:16
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
அல்குர்ஆன் 42:21

மேலும், பித்அத் சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

Blogger Widget

அழகிய முன் மாதிரி -8

தினம் ஒரு ஹதீஸ்-461

حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ رَجُلًا قَالَ : يَا مُحَمَّدُ ، يَا سَيِّدَنَا وَابْنَ سَيِّدِنَا ، وَخَيْرَنَا وَابْنَ خَيْرِنَا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا أَيُّهَا النَّاسُ ، عَلَيْكُمْ بِتَقْوَاكُمْ ، وَلَا يَسْتَهْوِيَنَّكُمْ الشَّيْطَانُ ، أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ، وَاللَّهِ مَا أُحِبُّ أَنْ تَرْفَعُونِي فَوْقَ مَنْزِلَتِي الَّتِي أَنْزَلَنِي اللَّهُ عَزَّ وَجَلَّ  
12313 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ


முஹம்மதே! எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் (நபி  (ஸல்) அவர்களிடம்) கூறினார். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள், மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்   (ரலி)
நூல்: அஹ்மத் 12313

Anas bin Malik (ra) reported:
A man said, “O Muhammad! O master, son of our master! O best of us, son of the best of us!” The Messenger of Allah (sal) said, “O people, you must be mindful of Allah and do not allow Satan to deceive you. I am Muhammad the son of Abdullah, the servant of Allah and his messenger. By Allah, I do not love for you to raise my position above what Allah the Exalted has granted me.
[Ahmad 12313]

'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் ' அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று 'நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி)  அவர்கள் சொல்ல கேட்டுள்ளதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 3445)
அழகிய முன் மாதிரி சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 123456, 7

Blogger Widget

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -13


தினம் ஒரு ஹதீஸ்-444

حَدَّثَنَا أَسْوَدُ، وَحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، قَالَا : حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الدُّعَاءَ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ ، فَادْعُوا
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 12344

பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை (அல்லாஹ்வால்) மறுக்கப்படாது; (எனவே அதிகமாக) அ(ந்நேரத்)தில் பிரார்த்தியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12344

It was narrated Anas (ra), that The Messenger of Allah (sal) said, “Dua is not rejected between the Adhan and the Iqamah, so make dua”.
[Ahmad 12344]

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12

Blogger Widget

கியாமத் நாளின் அடையாளங்கள் -10


தினம் ஒரு ஹதீஸ்-429

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ, أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ, عَنْ سَعِيدِ بْنِ سِمْعَانَ, عَنْ أَبِي هُرَيْرَةَ, أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ, وَيَكْثُرَ الْكَذِبُ, وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ, وَيَتَقَارَبَ الزَّمَانُ, وَيَكْثُرَ الْهَرْجُقِيلَ وَمَا الْهَرْجُ قَالَ الْقَتْلُ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 10497

குழப்பங்கள் தோன்றுவது, பொய்யுரைத்தல் பெருகுவது, கடைகள் பெருகி அருகருகே அமைவது, காலம் சுருங்குவது, ஹர்ஜ் பெருகுவது ஆகியன ஏற்படாதவரை அந்த நேரம் (உலக அழிவு நாள்) ஏற்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘ஹர்ஜ் என்றால் என்ன?‘ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கொலை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 10497

Abu Huraira (ra) narrated that The Messenger of Allah (sal) said, “The Hour will not be established until there appear tribulations, an increase in falsehood, the markets become close together, time will pass quickly, and there is much Harj.” They said, “What is Harj?” The Prophet (sal) said, “Killing.
[Ahmad 10497]
கியாமத் நாளின் அடையாளங்கள் சம்பந்தமான முந்தைய பதிவுகள்:1,2,3,4,5,6,7,8,9
மேலும், தொடர்புடைய பிற பதிவு: பொய்…
Blogger Widget

பொய்…


தினம் ஒரு ஹதீஸ்-424

حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ : حَدَّثَنَا لَيْثٌ، قَالَ : حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي هُرَيْرَة، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ قَالَ لِصَبِيٍّ : تَعَالَ هَاكَ ثُمَّ لَمْ يُعْطِهِ ، فَهِيَ كَذْبَةٌ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 9624

எவரொருவர் ஒரு குழந்தையிடம் ‘இங்கே வந்து இதை எடுத்துக்கொள்’ என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அவர் பொய் பேசியதாக கணக்கிலடப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9624

It was narrated from Abu Hurayrah (ra) that The Messenger of Allah (sal) said: “Whoever says to a child, ‘Come here and take this,’ then does not give him something, this is counted as a lie.
[Ahmad 9624]
தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget

நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்…


தினம் ஒரு ஹதீஸ்-410

حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُ قَالَ لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا ، فَإِنْ لَمْ تَجِدْ ، فَالْقَ أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 20989

நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: அஹ்மத் 20989

Abu Dharr (ra) reported:
The Prophet (sal) said, Don’t consider anything insignificant out of good things even if it is that you meet your brother with a cheerful countenance.
[Ahmad 20989]
Blogger Widget

தொழுகையும், தர்மமும் ஏற்கப்பட…


தினம் ஒரு ஹதீஸ்-402

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ تُقْبَلُ صَدَقَةٌ مِنْ غُلُولٍ ، وَلاَ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 4823

உளூ செய்யாமல் எந்தத் தொழுகையும் (அல்லாஹ்வால்) ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் (அல்லாஹ்வால்) ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 4823

It was narrated from Ibn ‘Umar (ra), that Allah’s Messenger (sal) said: “No Salah is accepted without Wudu’ (purification), and no charity (is accepted) from goods acquired by embezzlement.
[Ahmad 4823]
மேலும், உளூ சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளைக் காண,இங்கே கிளிக் செய்யுங்கள்தர்மம் சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளைக் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget