அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நிராகரிக்கப்படும் பித்அத்...

தினம் ஒரு ஹதீஸ்-469

அல்லாஹ்வும், அவனது தூதரும் மார்க்கமாக்கிய செயல்களைத் தவிர்த்து வேறு செயல்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வது பித்அத் எனப்படும், மார்க்கத்தில் அனைத்து அமல்களும் கூறப்பட்டு விட்டன. அதனை விடுத்து மார்க்கம் என்ற பெயரில் நாமாக தொழுகை, நோன்பு போன்ற செயல்களை மார்க்கத்தில் உள்ளது போல் செய்தாலும் அது அல்லாஹ்விடம் நிராகரிக்கப்பட்டு விடும், அதற்கு எந்த நன்மையும் கிடைக்காது, மேலும் அது நரகத்திலும் சேர்த்து விடும்.

حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ 
‎2697 ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ، سَمِعَ الْقَاسِمَ ، قَالَ : سَمِعْتُ عَائِشَةَ ، تَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا  فَهُوَ رَدٌّ
24903  ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ
யார் நமது (மார்க்க) விஷயத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது (அல்லாஹ்வால்) நிராகரிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
”நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கமெனக் கருதி) யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்வால்) நிராகரிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 24903
Aisha (ra) reported that Allah’s Messenger (sal) said: If somebody innovates something which is not in harmony with the principles of our religion, that thing is rejected." 
[Bukhari 2697]
Aisha (ra) reported that Allah’s Messenger (sal) said: He who did any act for which there is no sanction from our behalf, that is to be rejected.
[Ahmad 24903]

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5:3
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 49:16
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
அல்குர்ஆன் 42:21

மேலும், பித்அத் சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

Blogger Widget