அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அழகிய முன் மாதிரி -9

தினம் ஒரு ஹதீஸ்-466

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْحُسَيْنِ، - اسْمُهُ خَالِدٌ الْمَدَنِيُّ - قَالَ كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَتَغَنَّيْنَ فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ فَذَكَرْنَا ذَلِكَ لَهَا ‏.‏ فَقَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَبِيحَةَ عُرْسِي وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ وَتَقُولاَنِ فِيمَا تَقُولاَنِ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ ‏.‏ فَقَالَ ‏ "‏ أَمَّا هَذَا فَلاَ تَقُولُوهُ مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ 
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 1887

நாங்கள் மதீனாவில் ஆசூரா நாளன்று இருந்தோம். அப்போது சில சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ருபைய் பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். இது பற்றி அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், எனது திருமண நாளன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள், பத்ருப் போரில் கொல்லப்பட்ட அவர்களின் முன்னோர்களைப் பற்றி புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அதில் எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார் என்று அவ்விரு சிறுமிகளும் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுஸைன் (ரஹ்)
நூல்: இப்னுமாஜா 1887

Narrated Abu Hussain (rah): 
“We were in Al-Madinah on the Say of 'Ashura and the girls were beating the Daff and singing. We entered upon Rubai' bint Mu'awwidh (ra) and mentioned that to her. She said: 'The Messenger of Allah entered upon me on the morning of my wedding, and there were two girls with me who were singing and mentioning the qualities of my forefathers who were killed on the Day of Badr. One of the things they were saying was: “Among us there is a Prophet who knows what will happen tomorrow.” The Prophet (sal) said: “Do not say this, for no one knows what will happen tomorrow except Allah.
[Ibnmajah 1887]

'வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 27:65
அழகிய முன் மாதிரி சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1234567, 8
Blogger Widget