அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இனவெறி , நிறவெறிக்கு இஸ்லாத்தில் இடமில்லை..

தினம் ஒரு ஹதீஸ்-500

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ ، عَنْ أَبِي نَضْرَةَ ، حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ ، أَلاَ إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ ، أَلاَ لاَ فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ ، وَلاَ لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ ، وَلاَ أَحْمَرَ عَلَى أَسْوَدَ ، وَلاَ أَسْوَدَ عَلَى أَحْمَرَ ، إِلاَّ بِالتَّقْوَى أَبَلَّغْتُ ، قَالُوا : بَلَّغَ رَسُولُ اللهِ ، ثُمَّ قَالَ : أَيُّ يَوْمٍ هَذَا ؟ قَالُوا : يَوْمٌ حَرَامٌ ، ثُمَّ قَالَ : أَيُّ شَهْرٍ هَذَا ؟ قَالُوا : شَهْرٌ حَرَامٌ ، قَالَ : ثُمَّ قَالَ : أَيُّ بَلَدٍ هَذَا ؟ قَالُوا بَلَدٌ حَرَامٌ ، قَالَ : فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ : وَلاَ أَدْرِي قَالَ : أَوْ أَعْرَاضَكُمْ ، أَمْ لاَ ـ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا ، فِي شَهْرِكُمْ هَذَا ، فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ ، قَالُوا : بَلَّغَ رَسُولُ اللهِ ، قَالَ : لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِب
22978 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (விடைபெறும் ஹஜ்) யாத்திரையின் (இறுதி)நாளின் நண்பகல் நேரத்தில், "மக்களே! உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் (ஆதம் (அலை))  ஒருவரே. ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர". என்று மக்களுக்கு உரையாற்றிய பின்பு, நான் உங்களுக்கு தூதுச்செய்தியை எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்து விட்டார் எனக் கூறினார்கள். 
பிறகு மக்களிடம் “இது எந்த நாள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது புனிதமிக்க தினமாகும்!" என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம்?” என்று கேட்க மக்கள், “இது புனிதமிக்க மாதமாகும்” என்று பதிலளித்தார்கள்.பிறகு, நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நகரம்?” என்று கேட்க மக்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!” என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள். பிறகு, "(அல்லாஹ் எனக்கு அருளிய) தூதுச்செய்தியினை நான் உங்களுக்கு நிச்சயமாக அறிவித்து விட்டேன். நான் உங்களுக்கு தூதுச்செய்தியை எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபி (ஸல்) அவர்கள் கேட்க, மக்கள், அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்து விட்டார் எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூநத்ரா  (ரலி)
நூல்: அஹ்மத் 22978

Abu Nadrah (ra) reported:
The Messenger of Allah (sal) said during the middle of the day at the end of the pilgrimage, “O people, your Lord is one and your father (Adam (alai)) is one. There is no favor of an Arab over a non-Arab, nor a non-Arab over an Arab, and neither white skin over black skin, nor black skin over white skin, except by righteousness. Have I not delivered the message?” They said, “The Messenger of Allah has delivered the message.” 
Then the Prophet (sal) asked: "Which day is this?" They replied: "A sacred day." The Prophet (sal) asked: "Which month is this?" They replied: "A sacred month." The Prophet (sal) asked: "Which town is this?" They replied: "A sacred town." then The Messenger of Allah (sal) said, "No doubt, Allah made your blood, your properties, and your honor sacred to one another like the sanctity of this day of yours in this month of yours in this town of yours. Verily! I have conveyed this message to you. "Have I delivered the message? They said: "The Prophet (sal) has delivered the message." The Prophet (sal) said: "May those who are present inform those who are absent."
[Ahmad 22978]
Blogger Widget