அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அதிகமாக சிரிக்காதீர்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-397

சிரிப்பதையோ, நகைச்சுவை உணர்வுடன் இருப்பதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை, ஆனால் பொய் சொல்லி சிரிக்க வைக்கவோ, பிறரைஏமாற்றி, பயமுறுத்தி சிரிப்பதோ கூடாது, சிரிப்பதிலும் அளவு கடந்து போய் விடக் கூடாது, ஒரு முஸ்லிம் இம்மையை விட மறுமைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிகமாக சிரிப்பதானது இறைநினைவு, மரண, மறுமை சிந்தனையிலிருந்து நம்மை அப்புறப்படுத்தி விடும், அவ்வாறு இறைநினைவு அற்ற உள்ளமானது மரணித்த உள்ளமாகும்.
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺑَﺸَّﺎﺭٍ، ﻗَﺎﻝَ: ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮٍ ﺍﻟْﺤَﻨَﻔِﻲُّ، ﻗَﺎﻝَ: ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟْﺤَﻤِﻴﺪِ ﺑْﻦُ ﺟَﻌْﻔَﺮٍ، ﻋَﻦْ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠﻪِ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗَﺎﻝَ ﻻَ ﺗُﻜْﺜِﺮُﻭﺍ ﺍﻟﻀَّﺤِﻚَ، ﻓَﺈِﻥَّ ﻛَﺜْﺮَﺓَ ﺍﻟﻀَّﺤِﻚِ ﺗُﻤِﻴﺖُ ﺍﻟْﻘَﻠْﺐَ
ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ ﻟﻠﺒﺨﺎﺭﻱ 247

அதிகமாக சிரிக்காதீர்கள், ஏனென்றால் அதிகமாக சிரிப்பது (இறைநினைவிலிருந்து விலக்குவதன் மூலம்) உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 247

It was narrated from Abu Hurairah (ra) that the Prophet (sal) said: “Do not laugh a lot, for laughing a lot deadens the heart (spiritually)
[Bukhari / al-Adab al-Mufrad 247]
Blogger Widget