அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் -10

தினம் ஒரு ஹதீஸ்-492

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِمْتُ فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَاكَ الْبِرُّ كَذَاكَ الْبِرُّ وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ 
24026 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ

(ஒருநாள்) தூக்கத்தின் போது கனவில் சொர்க்கத்தில் என்னை நான் கண்டேன். அப்போது ஒருவர் ஓதும் குரலை (சொர்க்கத்தில்) செவியுற்றேன். இவர் யார்? என்று நான் கேட்டபோது, இவர் ஹாரிஸா பின் நுஃமான் என்று அவர்கள் பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நன்மை (யின் கூலி) இவ்வாறுதான். நன்மை (யின் கூலி) இவ்வாறுதான்", ஹாரிஸா அவர்கள் தான் மக்களிலேயே தம் தாயாருக்கு அதிக சேவையாற்றுபவர்களாக இருந்தார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா  (ரலி)
நூல்: அஹ்மத் 24026

Aisha (ra) reported:
The Messenger of Allah (sal) said: “I slept and I dreamt that I saw myself in Paradise, and I heard the voice of someone reciting. I said: ‘Who is this?’ They said: ‘This is Haarishah bin Nu‘maan.’” And the prophet (sal) said: “That is because of kindness, That is because of kindness” And he was the one who honored his mother the most among the people
[Ahmad 24026]

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண இங்கேயும்பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget