அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும்...

தினம் ஒரு ஹதீஸ்-502

حَدَّثَنَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عِيسَى بْنِ عَاَصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ ‏"‏ ‏.‏ ثَلاَثًا ‏"‏ وَمَا مِنَّا إِلاَّ وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ ‏"‏ ‏
3910 ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ


""சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் ; சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும்" என்று மூன்று முறை கூறி விட்டு, நம்மில் எவருக்கும் இத்தகைய எண்ணம் ஏற்படாமலில்லை. எனினும் (நமக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும்) அல்லாஹ்வையே முழுவதுமாக நம்பிச் சார்ந்திருப்பதன் மூலம் (தவக்குல்) அல்லாஹ் அதனை நீக்குவான்"" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: அபூதாவூத் 3910

Narrated Abdullah ibn Mas'ud (ra):
The Messenger of Allah (sal) said: Taking omens is shirk; taking omens is shirk. He said it three times. Every one of us has some (superstition), but Allah removes it by trust (in Him).
[Abudawud 3910]

Blogger Widget