அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சகுனம் பார்த்து நாடிய காரியத்தைச் செய்யாது விட்டால்...

தினம் ஒரு ஹதீஸ்-503

حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ أَخْبَرَنَا ابْنُ هُبَيْرَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَدَّتْهُ الطِّيَرَةُ مِنْ حَاجَةٍ فَقَدْ أَشْرَكَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا كَفَّارَةُ ذَلِكَ قَالَ أَنْ يَقُولَ أَحَدُهُمْ اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُكَ وَلَا طَيْرَ إِلَّا طَيْرُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ 
6748 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ

ஒருவர் சகுனம் பார்த்து தான் நாடிய காரியத்தைச் செய்யாது பின்வாங்கினால் அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அதற்குப் பரிகாரம் என்ன? எனத் தோழர்கள் வினவினர். "அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ கைருக்க" (யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை; உன் சகுனமின்றி வேறு சகுனமில்லை; உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை) என கூறுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் 6748

Abdullah ibn Amr (ra) reported:
The Messenger of Allah (sal) said: Whoever lets tiyarah stop him from doing something is guilty of shirk.” They said, “What is the atonement for that?” He said, “To say: Allaahumma la khayra illaa khayruka wa laa tayra illaa tayruka wa laa ilaaha ghayruka (O Allah, there is no good except Your good, no omens except from You, and there is no god beside You).
[Ahmad 6748]
Blogger Widget