அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கியாமத் நாளின் அடையாளங்கள் -1


தினம் ஒரு ஹதீஸ்-116

உலக அழிவு வெள்ளிக்கிழமையில் தான் நிகழும், அது எந்த வெள்ளிக்கிழமை என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தெரியும், ஆனால் உலக அழிவு ஏற்படும் முன்பு அதை நமக்கு எச்சரிக்கும் விதமாக பல அடையாளங்கள் நிகழும், அவற்றை பார்ப்போம்:
‎حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، زُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ فُرَاتٍ، الْقَزَّازِ عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ اطَّلَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَقَالَ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صلى الله عليه وسلم وَيَأْجُوجَ وَمَأْجُوجَ وَثَلاَثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنَ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5228

(ஒரு முறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, “எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “யுக முடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது” என்று கூறி விட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்: 1.(வானிலிருந்து வரும்) புகைமூட்டம், 2.தஜ்ஜால், 3.(பேசும்) பிராணி, 4.மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 5.மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குதல், 6.யஃஜூஜ் , மஃஜூஜ் கூட்டத்தார், 7.8.9.மூன்று நிலநடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், 10.இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக் கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்று கூட்டும்.
அறிவிப்பவர்: அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 5558

Narrated Abu Sareeha Hudhaifa bin Asid al-Ghifari (ra):
Allah’s Messenger (sal) came to us all of a sudden as we were (busy in a discussion). He said: What do you discuss about? They (the Companions) said. We are discussing about the Last Hour. Thereupon he said: It will not come until you see ten signs before and (in this connection) he made a mention of the 1.Smoke, 2.Dajjal, 3.The beast, 4.The rising of the sun from the west, 5.The descent of Esa (alai), son of Maryam, 6.The Gog and Magog, 7.8.9.Land-slidings in three places, one in the east, one in the west and one in Arabia 10.At the end of which fire would burn forth from the Yemen, and would drive people to the place of their assembly.
[Muslim 5558]
Blogger Widget