அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சொர்க்கத்தில் மாளிகை…


தினம் ஒரு ஹதீஸ்-423

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ أَبُو الْجَمَاهِرِ، قَالَ حَدَّثَنَا أَبُو كَعْبٍ، أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ السَّعْدِيُّ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ الْمُحَارِبِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4169

சத்தியத்தின் பால் இருந்து தர்க்கம் செய்வதை விட்டு விட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு மாளிகை கிடைக்கும் என்றும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு மாளிகை கிடைக்கும் என்றும், நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு மாளிகை கிடைக்கும் என்றும் நான் உத்திரவாதம் தருகிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் 4169

It was narrated from Abu Umamah (ra) that The Messenger of Allah (sal) said: I guarantee a house in the surroundings of Paradise for a man who avoids quarrelling even if he were in the right, a house in the middle of Paradise for a man who avoids lying even if he were joking, and a house in the upper part of Paradise for a man who made his character good.
[Abudawud 4169]
Blogger Widget