அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு…


தினம் ஒரு ஹதீஸ்-248

حَدَّثَنَا أَبُو مُوسَى الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ : قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ، مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ ، فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ ، وَإِنَّ الْكَذِبَ رِيبَةٌ
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2455

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியவைகளில், நீங்கள் நினைவில் வைத்திருக்கும் (முக்கிய) செய்தி என்ன?” என்று நான் (நபி (ஸல்) அவர்களின் பேரனான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம் கேட்டேன், அதற்கவர்கள், “உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்ற(உறுதியான விஷயத்)தின் பால் சென்று விடு. (ஏனெனில்) உண்மை, மனஅமைதி தரக்கூடியதாகவும், பொய், சந்தேகத்தை உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் நினைவில் வைத்துள்ளேன் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ அல்-ஹவ்ரா அஸ்-ஸஅதீ (ரஹ்)
நூல்: திர்மிதீ 2455

Abu Al-Hawra As-Sa’di (rah) reported:
I said to Hasan ibn Ali (ra), “What have you memorized from the Messenger of Allah (sal)?” He said: I memorized from the Messenger of Allah (sal) that he said, “Leave what makes you doubt to what does not make you doubt. Verily, truth brings tranquility but falsehood brings doubts.
[Tirmidhi 2455]
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
திருக்குர்ஆன் 17:36
Blogger Widget