அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கியாமத் நாளின் அடையாளங்கள் -3


தினம் ஒரு ஹதீஸ்-200

حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ عُمَرَ بْنَ عُبَيْدٍ، حَدَّثَهُمْ ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، – يَعْنِي ابْنَ عَيَّاشٍ ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا زَائِدَةُ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ فِطْرٍ، – الْمَعْنَى وَاحِدٌ -كُلُّهُمْ عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏لَوْ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلاَّ يَوْمٌ قَالَ زَائِدَةُ فِي حَدِيثِهِ لَطَوَّلَ اللَّهُ ذَلِكَ الْيَوْمَ ثُمَّ اتَّفَقُوا حَتَّى يَبْعَثَ فِيهِ رَجُلاً مِنِّي أَوْ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي وَاسْمُ أَبِيهِ اسْمَ أَبِي زَادَ فِي حَدِيثِ فِطْرٍ يَمْلأُ الأَرْضَ قِسْطًا وَعَدْلاً كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا‏‎‏ وَقَالَ فِي حَدِيثِ سُفْيَانَ ‏لاَ تَذْهَبُ أَوْ لاَ تَنْقَضِي الدُّنْيَا حَتَّى يَمْلِكَ الْعَرَبَ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4282

பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த (என் மகள் ஃபாத்திமாவின் வழித்தோன்றலில் வரும்) ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸுஃப்யான் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த (என் மகள் ஃபாத்திமாவின் வழித்தோன்றலில் வரும்) ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: அபூதாவூத் 4282

Narrated Abdullah ibn Mas’ud (ra):
The Prophet (sal) said: “If only one day of this world remained. Allah would lengthen that day, till He raised up in it a man who belongs to me or to my family whose father’s name is the same as my father’s, who will fill the earth with equity and justice as it has been filled with oppression and tyranny“. Sufyan’s (rah) version says: “The world will not pass away before the Arabs are ruled by a man of my family whose name will be the same as mine“.
[Abudawud 4282]

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவர் மஹ்தியா?

நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மஹ்தி, நான் தான் என்று கூறிக்கொண்டு திரிந்தவர்களில் ஒருவர் தாம் மிர்ஸா குலாம் அஹ்மத். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள குர்தாஸ்பூர் எனும் மாவட்டத்திலுள்ள காதியான் என்னும் ஊரில் பிறந்தவர். (காலம்: 13.02.1835 – 26.05.1908). இவர் தன்னை நபியென்றும், மஹ்தியென்றும், மஸீஹென்றும் இன்னும் பலவாறெல்லாம் கூறி கொண்டவர். இவரது ஊர் காதியான் என்பதால் இவரை பின்பற்றும் கூட்டத்தினர் காதியானிகள் என்றழைக்கப்படுகின்றனர்.
மர்யம் (அலை) அவர்களின் மகன் தான் மஸீஹ் (அலை) அவர்களே தவிர, ஷிராஃக் பீபியின் மகன் அல்ல. மேலும், நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி, அவருக்குப் பின் எந்த நபியும் கிடையாது என்பதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். (மார்க்கம் நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போதே முழுமையடைந்த பின் மீண்டும் வேறொரு நபி வர வேண்டிய அவசியமில்லை என்ற அடிப்படையைக் கூட விளங்காதவர்கள் தான் இந்த காதியானிகள்) சரி, தலைப்பிற்குள் செல்வோம்:
நபி (ஸல்) அவர்கள் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றிக் கூறிய முன்னறிவிப்போடு இந்த மிர்ஸா குலாம் அஹ்மதை ஒப்பிட்டு பார்த்தாலே இவர் மஹ்தி (அலை) அவர்களாக இருக்க முடியாது என்பதை விளங்கலாம். மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவர் மஹ்தி கிடையாது என்பதற்கான காரணங்கள்:
1. மஹ்தி (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதாவது நபி (ஸல்) அவர்களின் மகளான ஃபாத்திமாவின் வழித்தோன்றலிருந்து வருபவர். ஆனால் மிர்ஸா குலாம் அஹ்மதோ நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர் கிடையாது.
2. மஹ்தி (அலை) அவர்களின் பெயர் நபி (ஸல்) அவர்களின் பெயரான முஹம்மது என்பதாகும், நபி (ஸல்) அவர்களுக்கு அஹ்மத் என்ற பெயர் இருப்பினும், இந்த மிர்ஸாவின் பெயர் அஹ்மத் என்பதல்ல. குலாம் அஹ்மத். அதாவது அஹ்மதின் அடிமை (நபி (ஸல்) அவர்களின் அடிமை) என்பதே அவரது பெயர்.
3. மஹ்தி (அலை) அவர்களின் தந்தை பெயர் நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயரான அப்துல்லாஹ் என்பதாகும். ஆனால் மிர்ஸா குலாம் அஹ்மதின் தந்தை பெயரோ மிர்ஸா குலாம் முர்தஸா என்பதே.
4. மஹ்தி (அலை) அவர்கள், அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புபவர், மேலும் அரபு தேசத்தை ஆளக்கூடியவர். ஆனால் மிர்ஸா குலாம் அஹ்மதோ அரபு தேசத்தை அல்ல, அவர் வாழ்ந்த நாட்டைக் கூட ஆளவில்லை.
மிர்ஸா குலாம் அஹ்மத், மஹ்தி கிடையாது என்பது மேற்கண்ட காரணங்களின் மூலம் விளங்கும். அவர் மஹ்தி இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் புத்தி சுவாதீனமுள்ளவரா? என்பதே சந்தேகத்திற்குரிய ஒன்று. ஏனெனில், இவருக்கு எதிரான ஒருவருக்கு இவர் சாபம் (லஃனத்) விடுகிறாராம், 1000 சாபம் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இவர் அந்த 1000 சாபத்தைக் கூறும் இலட்சணத்தைப் பாருங்கள்: (1 சாபம் , 2 சாபம்,…,999 சாபம், 1000 சாபம்)
மிர்ஸா குலாம் அஹ்மத் எழுதிய பல நூல்களில் ஒன்று தான் ரூஹானி கஸாயீன். 23 பாகங்களைக் கொண்டது. அதிலுள்ள 8 வது பாகம் தான் நூருல் ஹக். அதன் கையெழுத்துப் பிரதியின் 158 to 162 வது பக்கங்கள்:
இந்த 1000 சாபத்தின் தெளிவான பிரதிகளைக் (computerized print) காண, இங்கே கிளிக் செய்யவும்.
இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்ட இந்த மிர்ஸா குலாம் அஹ்மதை நபியென்றும், மஹ்தியென்றும், மஸீஹென்றும் நம்பும் காதியானி கூட்டத்தினரே சிந்தியுங்கள்…
Blogger Widget