அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ்விடம் சொர்க்கத்தை கேட்டும், நரகத்தை விட்டு காப்பாற்றும்படியும் பிரார்த்தித்தால்...

தினம் ஒரு ஹதீஸ்-515

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ سَأَلَ الْجَنَّةَ ثَلاَثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلاَثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏ 
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 4340

ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: இப்னுமாஜா 4340

It was narrated from Anas bin Malik (ra) that the Messenger of Allah (sal) said: “Whoever asks for Paradise, three times, Paradise will say: “O Allah, admit him to Paradise.” And whoever asked to be saved from Hell, three times, Hell will say: “O Allah, save him from Hell.
[Ibnmajah 4340]
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை
திருக்குர்ஆன் 5:72

சொர்க்கம் சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும், நரகம் சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகும் பிள்ளைகள் செய்ய வேண்டிய பணிவிடைகள்...

தினம் ஒரு ஹதீஸ்-489

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَسِيدِ بْنِ عَلِيِّ بْنِ عُبَيْدٍ، مَوْلَى بَنِي سَاعِدَةَ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أُسَيْدٍ، مَالِكِ بْنِ رَبِيعَةَ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سُلَيْمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَبَقِيَ مِنْ بِرِّ أَبَوَىَّ شَىْءٌ أَبَرُّهُمَا بِهِ مِنْ بَعْدِ مَوْتِهِمَا قَالَ ‏ "نَعَمْ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا وَإِيفَاءٌ بِعُهُودِهِمَا مِنْ بَعْدِ مَوْتِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ تُوصَلُ إِلاَّ بِهِمَا ‏"‏ ‏ 
3664 ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்த நேரத்தில் பனீ ஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகும் நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது , அவர்கள் இருவருக்காக பாவமன்னிப்புத் தேடுவது, அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களின் நண்பர்களுக்கு கண்ணியம் செய்வது, அவர்களின் மூலமாக மட்டுமே சொந்தமாகக் கூடிய உறவுகளை இணைத்து வாழ்வது (இவைதான் நீ அவர்களுடைய மரணத்திற்குப் பிறகும் அவர்களுக்குச் செய்யக்கூடிய பணிவிடைகள்) ஆகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உசைத் - மாலிக் பின் ரபீஆ (ரலி)
நூல்: இப்னுமாஜா 3664

It was narrated that Abu Usaid - Malik bin Rabi'ah (ra), said: "While we were with the Prophet(sal), a man from the Banu Salamah came to him and said: "O messenger of Allah!, is there anyway of honoring my parents that I can still do for them after they die?' He said: "Yes offering the funeral prayer for them, praying for forgiveness for them, fulfilling their promises after their death, honoring their friends and upholding the ties of kinship which you would not have were it nor for them.'
[Ibn Majah 3664]

"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 17:23, 24

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
திருக்குர்ஆன் 29:8

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
திருக்குர்ஆன் 31:15

Blogger Widget

அழகிய முன் மாதிரி -12

தினம் ஒரு ஹதீஸ்-485

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَكَلَّمَهُ فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ فَقَالَ لَهُ هَوِّنْ عَلَيْكَ فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ 
3312 ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ

ஒரு மனிதர் (முதன் முதலாக) நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். (பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபி (ஸல்) அவர்களையும் அது போல் கருதிக்கொண்டு) குரலில் ஒருவித நடுக்கத்துடன் பேசினார்.  உடனே அம்மனிதரிடம் நபி(ஸல்) அவர்கள், "இயல்பாக இருப்பீராக! நான் மன்னன் கிடையாது. உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த பெண்ணுடைய மகன் தான் நான்"  என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)
நூல்: இப்னுமாஜா 3312

It was narrated that Abu Mas`ud (ra) said: A man came to the Prophet (sal) and his voice trembled out of awe as he spoke to him. The Prophet (sal) said to him, “Be calm, for I am not a king. Verily, I am only the son of a woman who ate dried meat.
[Ibn Majah 3312]
அழகிய முன் மாதிரி சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1234567, 89,1011
Blogger Widget

அண்டைவீட்டார் -2...

தினம் ஒரு ஹதீஸ்-476

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَجُلٌ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم‏ كَيْفَ لِي أَنْ أَعْلَمَ إِذَا أَحْسَنْتُ وَإِذَا أَسَأْتُ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم إِذَا سَمِعْتَ جِيرَانَكَ يَقُولُونَ قَدْ أَحْسَنْتَ فَقَدْ أَحْسَنْتَ وَإِذَا سَمِعْتَهُمْ يَقُولُونَ ‏:‏ قَدْ أَسَأْتَ فَقَدْ أَسَأْتَ  
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ 4221

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதரே!) நான் (மற்றவர்களுடன்) நல்ல முறையில் நடந்து கொண்டேனா அல்லது தீய முறையில் நடந்துகொண்டேனா என்பதை எப்படி நான் அறிந்து கொள்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது அண்டைவீட்டாரிடம் கேளுங்கள், நீங்கள் நல்ல முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறச் செவியுற்றால் நீங்கள் நல்லது செய்தீர்கள் , நீங்கள் தீய முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறச் செவியுற்றால் நீங்கள் தீயது செய்தீர்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: இப்னுமாஜா 4221

It was narrated that Abdullah bin Mas’ud (ra) said, A man said to the Messenger of Allah (sal): ‘How can I know when I have done well and when I have done something bad?’ The Prophet (sal) said: If you hear your neighbors saying that you have done well, then you have done well, and if you hear them saying that you have done something bad, then you have done something bad.
[Ibnmajah 4221]


தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget

அழகிய முன் மாதிரி -9

தினம் ஒரு ஹதீஸ்-466

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْحُسَيْنِ، - اسْمُهُ خَالِدٌ الْمَدَنِيُّ - قَالَ كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَتَغَنَّيْنَ فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ فَذَكَرْنَا ذَلِكَ لَهَا ‏.‏ فَقَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَبِيحَةَ عُرْسِي وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ وَتَقُولاَنِ فِيمَا تَقُولاَنِ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ ‏.‏ فَقَالَ ‏ "‏ أَمَّا هَذَا فَلاَ تَقُولُوهُ مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ 
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 1887

நாங்கள் மதீனாவில் ஆசூரா நாளன்று இருந்தோம். அப்போது சில சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ருபைய் பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். இது பற்றி அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், எனது திருமண நாளன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள், பத்ருப் போரில் கொல்லப்பட்ட அவர்களின் முன்னோர்களைப் பற்றி புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அதில் எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார் என்று அவ்விரு சிறுமிகளும் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுஸைன் (ரஹ்)
நூல்: இப்னுமாஜா 1887

Narrated Abu Hussain (rah): 
“We were in Al-Madinah on the Say of 'Ashura and the girls were beating the Daff and singing. We entered upon Rubai' bint Mu'awwidh (ra) and mentioned that to her. She said: 'The Messenger of Allah entered upon me on the morning of my wedding, and there were two girls with me who were singing and mentioning the qualities of my forefathers who were killed on the Day of Badr. One of the things they were saying was: “Among us there is a Prophet who knows what will happen tomorrow.” The Prophet (sal) said: “Do not say this, for no one knows what will happen tomorrow except Allah.
[Ibnmajah 1887]

'வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 27:65
அழகிய முன் மாதிரி சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1234567, 8
Blogger Widget

தும்மலும் பதில் கூறுதலும் -2

தினம் ஒரு ஹதீஸ்-455

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَشَمَّتَ أَحَدَهُمَا - أَوْ سَمَّتَ - وَلَمْ يُشَمِّتِ الآخَرَ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ عَطَسَ عِنْدَكَ رَجُلاَنِ فَشَمَّتَّ أَحَدَهُمَا وَلَمْ تُشَمِّتِ الآخَرَ فَقَالَ ‏إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَإِنَّ هَذَا لَمْ يَحْمَدِ اللَّهَ  
3711 ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ


நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக இரு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக)) என்று மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் முன்பாக இருவர் தும்மினார்கள். ஆனால் நீங்கள் ஒருவருக்கு மட்டும் மறுமொழி கூறி மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லையே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் (தும்மியவுடன் அல்ஹம்து லில்லாஹ் என்று) இறைவனைப் புகழ்ந்தார்.  ஆனால் மற்றொருவரோ இறைவனைப் புகழவில்லை (எனவேதான், ஒருவருக்கு மறு மொழி பகர்ந்தேன். மற்றவருக்கு மறுமொழி பகரவில்லை) என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: இப்னுமாஜா 3711

Narrated Anas bin Malik (ra): Two men sneezed in he presence of the Prophet (sal) and he replied (said: YarhamukAllah; may Allah have mercy on you') to one and not to the other. It was said: 'O Messenger of Allah, two men sneezed in your presence and you replied to one and not to the other?' He said: "'This one praised Allah (said Al-Hamdulillah after sneezing) but that one did not.
[Ibn Majah 3711]
தொடர்புடைய பிற பதிவு:தும்மலும் பதில் கூறுதலும். -1..
Blogger Widget

பள்ளிக்குத் தொழ செல்லாமலிருந்தால்…


தினம் ஒரு ஹதீஸ்-431

حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، أَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلاَ صَلاَةَ لَهُ إِلاَّ مِنْ عُذْرٍ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 785

ஒருவர் தொழுகை அழைப்பைச் (பாங்கு) செவியுற்று காரணமில்லாமல் (பள்ளிக்குத் தொழ) வரவில்லையென்றால் (அவர் அத்தொழுகையை வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ தொழுதால்) அவருடைய அத்தொழுகை ஏற்கப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: இப்னுமாஜா 785

It was narrated from Ibn ‘Abbas (ra) that, The Prophet (sal) said: “Whoever hears the call and does not come, his prayer is not valid, except for those who have an excuse.
[Ibnmajah 785]

தொழுகை சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-427

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ يَعْنِي الْمَوْتَ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ 4256

(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 4256

It was narrated that Abu Hurairah (ra) said, The Messenger of Allah (sal) said: “Frequently remember the destroyer of pleasures – death.
[Ibnmajah 4256]
உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோர் தமது களத்திற்குச் சென்றிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:154
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும்.
திருக்குர்ஆன் 3:185
நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.
திருக்குர்ஆன் 4:78
உறுதியானது (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக!
திருக்குர்ஆன் 15:99
நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 62:8

தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget

சோதனை -3


தினம் ஒரு ஹதீஸ்-416

حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ, وَيَحْيَى بْنُ دُرُسْتَ, قَالَا : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ, عَنْ عَاصِمٍ, عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ, عَنْ أَبِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ, قَالَ : قُلْتُ يَا رَسُولَ اللَّهِ, أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ الْأَنْبِيَاءُ, ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ, يُبْتَلَى الْعَبْدُ عَلَى حَسَبِ دِينِهِ, فَإِنْ كَانَ فِي دِينِهِ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ, وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ, فَمَا يَبْرَحُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الْأَرْضِ وَمَا عَلَيْهِ مِنْ خَطِيئَةٍ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 4021

நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) “நபிமார்கள்; பிறகு (மார்க்கப் பிடிப்பில்) அவர்களுக்கு நெருக்கமானவர்கள்; அதன் பிறகு (மார்க்கப் பிடிப்பில்) அவர்களுக்கு நெருக்கமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: இப்னுமாஜா 4021

Narrated Sa`d ibn Abi Waqqas (ra):
I asked the Prophet (sal) “O Messenger of Allah! Which of the people is tried most severely?” He said: “The Prophets, then those nearest to them, then those nearest to them. A man is tried according to his religion; if he is firm in his religion, then his trials are more severe, and if he is frail in his religion, then he is tried according to the strength of his religion. The servant shall continue to be tried until he is left walking upon the earth without any sins.
[Ibnmajah 4021]
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
திருக்குர்ஆன் 2:214
நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்.
திருக்குர்ஆன் 29:2,3
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
திருக்குர்ஆன் 2:286
Blogger Widget

அல்லாஹ், அளவற்ற அருளாளன், நிகரற்ற பேரன்புடையவன்…


தினம் ஒரு ஹதீஸ்-396

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ لِلَّهِ مِائَةَ رَحْمَةٍ قَسَمَ مِنْهَا رَحْمَةً بَيْنَ جَمِيعِ الْخَلاَئِقِ فَبِهَا يَتَرَاحَمُونَ وَبِهَا يَتَعَاطَفُونَ وَبِهَا تَعْطِفُ الْوَحْشُ عَلَى أَوْلاَدِهَا وَأَخَّرَ تِسْعَةً وَتِسْعِينَ رَحْمَةً يَرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ الْقِيَامَةِ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 4291

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பாகத்தை (மனிதன், ஜின், பறவைகள், மிருகங்கள், ஊர்வன என) அனைத்துப் படைப்பினங்களுக்கிடையே அல்லாஹ் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 4291

It was narrated from Abu Hurairah (ra) that the Prophet (sal) said: “Allah has one hundred (degrees of) mercy, of which He has shared one between all of creation, by virtue of which you show mercy and compassion towards one another and the wild animals show compassion towards their young. And He has kept back ninety-nine (degrees of) mercy by virtue of which He will show mercy to His slaves on the Day of Resurrection.
[Ibnmajah 4291]
Blogger Widget

மாறாத ஆசைகள்…


தினம் ஒரு ஹதீஸ்-341

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، : مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ قَلْبُ الشَّيْخِ شَابٌّ فِي اثْنَتَيْنِ : فِي حُبِّ الْحَيَاةِ وَكَثْرَةِ الْمَالِ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 4231

முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். (அவை:) இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம் மற்றும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 4231

It was narrated from Abu Hurairah (ra) that the Messenger of Allah (sal) said: “The heart of an old man is young in the love of two things: Love of life and much wealth.
[Ibn Majah 4231]
Blogger Widget

அல்லாஹ்வின் பிடியிலிருந்து அநீதி இழைப்பவனால் தப்ப முடியாது…


தினம் ஒரு ஹதீஸ்-338

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ يُمْلِي لِلظَّالِمِ فَإِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ ثُمَّ قَرَأَ وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 4016

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால், அவனைத் தப்ப விடமாட்டான்” என்று கூறிவிட்டு, “அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தருவது; கடினமானது (11:102)” எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: இப்னுமாஜா 4016

It was narrated from Abu Musa al Ash’ari (ra) that the Messenger of Allah (sal) said: ‘Allah gives respite to the wrongdoer, then when He seizes him, He does not let him go.” Then he recited: “Such is the Seizure of your Lord when He seizes the (population of) towns while they are doing wrong. (11:102)
[Ibnmajah 4016]
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:61
Blogger Widget

ஆஷூரா நோன்பின் சிறப்பு…


தினம் ஒரு ஹதீஸ்-327

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ 1728

ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: இப்னுமாஜா 1728

It was narrated from Abu Qatadah (ra) that the Messenger of Allah (sal) said: “Fasting the day of ‘Ashura’, I hope, Allah will expiate for the sins of the previous year.
[Ibnmajah 1728]
Blogger Widget