அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தும்மலும் பதில் கூறுதலும் -2

தினம் ஒரு ஹதீஸ்-455

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَشَمَّتَ أَحَدَهُمَا - أَوْ سَمَّتَ - وَلَمْ يُشَمِّتِ الآخَرَ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ عَطَسَ عِنْدَكَ رَجُلاَنِ فَشَمَّتَّ أَحَدَهُمَا وَلَمْ تُشَمِّتِ الآخَرَ فَقَالَ ‏إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَإِنَّ هَذَا لَمْ يَحْمَدِ اللَّهَ  
3711 ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ


நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக இரு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக)) என்று மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் முன்பாக இருவர் தும்மினார்கள். ஆனால் நீங்கள் ஒருவருக்கு மட்டும் மறுமொழி கூறி மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லையே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் (தும்மியவுடன் அல்ஹம்து லில்லாஹ் என்று) இறைவனைப் புகழ்ந்தார்.  ஆனால் மற்றொருவரோ இறைவனைப் புகழவில்லை (எனவேதான், ஒருவருக்கு மறு மொழி பகர்ந்தேன். மற்றவருக்கு மறுமொழி பகரவில்லை) என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: இப்னுமாஜா 3711

Narrated Anas bin Malik (ra): Two men sneezed in he presence of the Prophet (sal) and he replied (said: YarhamukAllah; may Allah have mercy on you') to one and not to the other. It was said: 'O Messenger of Allah, two men sneezed in your presence and you replied to one and not to the other?' He said: "'This one praised Allah (said Al-Hamdulillah after sneezing) but that one did not.
[Ibn Majah 3711]
தொடர்புடைய பிற பதிவு:தும்மலும் பதில் கூறுதலும். -1..
Blogger Widget