அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பெற்றோருக்காக பாவமன்னிப்புக் கோருவதன் சிறப்பு…


தினம் ஒரு ஹதீஸ்-270

حَدَّثَنَا حَدَّثَنَا يَزِيدُ, أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ, عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ, عَنْ أَبِي صَالِحٍ, عَنْ أَبِي هُرَيْرَةَ, قََالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ فَيَقُولُ يَا رَبِّ, أَنَّى لِي هَذِهِ فَيَقُولُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 10390

வல்லமைமிக்க அல்லாஹ், நல்ல அடியாருக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியார், “என் இறைவா! இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பார். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் பிள்ளை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்து கிடைத்தது.)” என்று கூறுவான்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 10390

Narrated Abu Hurairah (ra):
The Messenger of Allah (sal) said, “Verily, Allah Almighty raises the grades of His righteous slaves in Paradise.” So, he asks Allah, “O my Lord! How did I attain this (high position)?” Allah says, “Because of the supplication of your child for your forgiveness.
[Ahmad 10390]
தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget