அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அழகிய முன் மாதிரி -12

தினம் ஒரு ஹதீஸ்-485

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَكَلَّمَهُ فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ فَقَالَ لَهُ هَوِّنْ عَلَيْكَ فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ 
3312 ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ

ஒரு மனிதர் (முதன் முதலாக) நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். (பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபி (ஸல்) அவர்களையும் அது போல் கருதிக்கொண்டு) குரலில் ஒருவித நடுக்கத்துடன் பேசினார்.  உடனே அம்மனிதரிடம் நபி(ஸல்) அவர்கள், "இயல்பாக இருப்பீராக! நான் மன்னன் கிடையாது. உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த பெண்ணுடைய மகன் தான் நான்"  என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)
நூல்: இப்னுமாஜா 3312

It was narrated that Abu Mas`ud (ra) said: A man came to the Prophet (sal) and his voice trembled out of awe as he spoke to him. The Prophet (sal) said to him, “Be calm, for I am not a king. Verily, I am only the son of a woman who ate dried meat.
[Ibn Majah 3312]
அழகிய முன் மாதிரி சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1234567, 89,1011
Blogger Widget