அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஸூரத்துல் இஃக்லாஸின் சிறப்பு -2

தினம் ஒரு ஹதீஸ்-459

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، مَوْلَى آلِ زَيْدِ بْنِ الْخَطَّابِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعَ رَجُلاً يَقْرَأُ ‏{‏ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ * اللَّهُ الصَّمَدُ * لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ‏}‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَجَبَتْ ‏"‏ ‏.‏ فَسَأَلْتُهُ مَاذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْجَنَّةُ   
983 ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்தேன். அப்போது  குல்ஹுவல்லாஹு அஹத், அல்லாஹுஸ் ஸமத், லம் யலித் வலம் யூலத், வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத் (அல்லாஹ் ஒருவன் என  கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை) என்ற (112 ஆவது) அத்தியாயத்தை (திரும்பத் திரும்ப) ஒருவர் ஓதுவதை நபி(ஸல்) அவர்கள்  செவியுற்றதும்,  (அவருக்குக்) கடமையாகி விட்டது என்று கூறினார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்ன கடமையாகி விட்டது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், சொர்க்கம் (கடமையாகி விட்டது) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ 983

Narrated Abu Hurairah (ra): 
'I came back (from a journey) with the Messenger of Allah (sal) and he heard a man reciting Qul Huwallahu Ahad, Allahus-Samad, Lam yalid wa lam yulad, Wa lam yakunllahu kufuwan ahad. ('Say: He is Allah, (the) One, the Self-Sufficient Master, He begets not, nor was He begotten. And there is none equal or comparable unto Him)' The Messenger of Allah (sal) said: 'It is guaranteed.' We asked him: 'What, O Messenger of Allah?' He said: 'Paradise.'"
[Nasa'i 983]

குர்ஆன் சம்பந்தமான தொடர்புடைய பிற பதிவுகள்:
சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும் அமல்கள் தொடர்பான பிற பதிவுகள்:
Blogger Widget