அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பாங்கிற்குப் பதில் கூறுதல்…


தினம் ஒரு ஹதீஸ்-110

‎حدثني إسحق بن منصور أخبرنا أبو جعفر محمد بن جهضم الثقفي حدثنا إسمعيل بن جعفرعن عمارة بن غزيةعن خبيب بن عبد الرحمن بن إساف عن حفص بن عاصم بن عمر بن الخطابعن أبيهعن جده عمر بن الخطابقال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر ثم قال أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله ثم قال أشهد أن محمدا رسول الله قال أشهد أن محمدا رسول الله ثم قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله ثم قال الله أكبر الله أكبر قال الله أكبر الله أكبر ثم قال لا إله إلا الله قال لا إله إلا الله من قلبه دخل الجنة
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 629

முஅத்தின் (பாங்கு சொல்பவர்) “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்)என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்)என்று சொல்லுங்கள். பின்பு அவர், “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்”(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொல்லுங்கள்.பின்பு அவர், “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொல்லுங்கள்.பின்பு அவர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்”(தொழுகையின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள் “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்”(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்.பின்பு அவர் “ஹய்ய அலல் ஃபலாஹ்”(வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்”(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்.பின்பு அவர் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்)என்று சொல்லுங்கள். பின்பு அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்”(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று சொன்னால் நீங்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்”(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்: முஸ்லிம் 629

Narrated Umar bin Khattab (ra):
The Messenger of Allah (sal) said: When the Mu’adhdhin says: “Allahu Akbar Allahu Akbar”(Allah is the Greatest Allah is the Greatest), and one of you should make this response: “Allahu Akbar Allahu Akbar” (Allah is the Greatest Allah is the Greatest); (and when the Mu’adhdhin) says: “Ash-hadu an la ilaha illallah” (I testify that there is no god but Allah), one should respond: “Ash-hadu an la ilaha illallah” (I testify that there is no god but Allah), and when he says: “Ash-hadu anna Muhammadan Rasulullah”(I testify that Muhammad is the Messenger of Allah), one should make a response: “Ash-hadu anna Muhammadan Rasulullah” (I testify that Muhammad is Allah’s Messenger). When he (the Mu’adhdhin) says: “Hayya ‘alas-salah” (Come to prayer), one should make a response: “La Hawla Wala Quwwata Illa Billah” (There is no might and no power except with Allah). When he (the Mu’adhdhin) says: “Hayya ‘alal-falah” (Come to salvation), one should respond: “La Hawla Wala Quwwata Illa Billah” (There is no might and no power except with Allah), and when he (the Mu’adhdhin) says: “Allahu Akbar Allahu Akbar”(Allah is the Greatest Allah is the Greatest), then make a response: “Allahu Akbar Allahu Akbar”(Allah is the Greatest Allah is the Greatest).When he (the Mu’adhdhin) says: “La ilaha illallah” (There is no god but Allah), and he who makes a response from the heart: “La ilaha illallah” (There is no god but Allah), he will enter Paradise.
[Muslim 629]
Blogger Widget