அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சொர்க்கம் செல்ல, நரகம் செல்லாமலிருக்க விருப்பமா?


தினம் ஒரு ஹதீஸ்-16

சொர்க்கம் செல்ல வேண்டும், நரகம் சென்று விடக் கூடாது என்பது உங்கள் விருப்பமா? எச்சூழ்நிலையிலும் அல்லாஹ்விற்கு இணை கற்பித்து விடாதீர்கள். உங்கள் துஆக்களை அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே கேளுங்கள், அவ்லியாக்கள் என்ற போர்வையில் இறந்தவர்களிடம் கையேந்தி விடாதீர்கள், மரணம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. அதுவே உங்களின் கடைசி நிலையாக அமைந்து விட்டால் உங்கள் விருப்பம் நிறைவேறாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ الْأَعْمَشِ, عَنْ شَقِيقٍ, عَنْ عَبْدِ اللَّهِ, قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَةً ، وَقُلْتُ أُخْرَى ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ , وَقُلْتُ : أَنَا مَنْ مَاتَ وَهْوَ لَا يَدْعُو لِلَّهِ نِدًّا دَخَلَ الْجَنَّةَ
‏ ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 4497

நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாதவரிடம் பிரார்தித்த நிலையில் (இணைகற்பித்த நிலையில்) எவர் இறந்து விடுகிறாரோ அவர் நரகம் புகுவார்‘ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாத எவரிடமும் பிரார்திக்காத நிலையில் (இணை கற்பிக்காத நிலையில்) எவர் இறந்து விடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்‘ என்று நான் சொன்னேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 4497

Abdullah Ibn Mas’ud (ra) reported:
The Prophet (sal) said one statement and I said another. He said, “Whoever dies while calling upon other than Allah as a partner will enter Hellfire.” I said, “Whoever dies while not calling upon other than Allah as a partner will enter Paradise.
[Bukhari 4497]
Blogger Widget