அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

குர்ஆனின் சிறப்புகள்...


தினம் ஒரு ஹதீஸ்-54

حدثنا محمد بن بشارحدثنا أبو بكر الحنفي حدثنا الضحاك بن عثمان عن أيوب بن موسى قال سمعت محمد بن كعب القرظيقال سمعت عبد الله بن مسعوديقول قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول الم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2910

அல்லாஹ்வின் வேதத்தில் (குர்ஆன்) ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். (ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள்). (2:1, 3:1, 29:1, 30:1, 31:1, 32:1 ஆகிய வசனங்களில் உள்ள) “அலிஃப்-லாம்-மீம்” என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். “அலிஃப்” என்பது ஒரு எழுத்து; “லாம்” என்பது ஒரு எழுத்து; “மீம்” என்பது ஒரு எழுத்து (ஆக, மூன்றெழுத்திற்கு முப்பது நன்மைகள்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: திர்மிதீ 2910

Abdullah bin Mas’ud (ra) reported: The Messenger of Allah (sal) said:
Whoever recites a letter from the Book of Allah, he will be credited with a good deed, and a good deed gets a ten-fold reward. I do not say that Alif-Laam-Meem is one letter, but Alif is a letter, Laam is a letter and Meem is a letter.
[Tirmidhi 2910]
Blogger Widget