அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -15

தினம் ஒரு ஹதீஸ்-460

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا يَزِيدُ أَبُو خَالِدٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَحْضُرْ أَجَلُهُ فَقَالَ عِنْدَهُ سَبْعَ مِرَارٍ أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عَافَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ الْمَرَضِ 
3106 ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ

மரணம் நெருங்காத ஒரு நோயாளியை ஒருவர் சந்திக்கச் சென்றால் ஏழு தடவை, அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம், அன் யஷ்ஃபியக (உனக்கு நிவாரணத்தைத் தர வேண்டுமென்று வலிமை மிகுந்த, அர்ஷுக்குச் சொந்தக்காரனான அல்லாஹ்விடம் கேட்கிறேன்) என்று கூறி பிரார்தித்தால்,  அல்லாஹ் அந்த நோயில் இருந்து அவருக்கு நிவாரணம் தராமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 3106

Narrated Ibn Abbas (ra): 
The Prophet (sal) said, "He who visits a sick person who is not on the point of death and supplicates seven times: As'alullahal-'Aleem Rabbal-'Arshil-'Aleem, an yashfiyaka (I ask Allah, the Mighty, the Lord of the mighty Throne, to cure you) Allah will certainly heal him from that sickness.
[Abudawud 3106]

 எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன்  63 : 11

அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி.

அல்குர்ஆன்  3 : 145

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.  
அல்குர்ஆன் 7:34

                                            தொடர்புடைய பிற பதிவுகள்:
நோயாளியையோ, இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் அவ்விடத்தில் நல்லதையே சொல்லுங்கள்…


துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12, 13, 14

Blogger Widget