அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஏற்க மறுத்தவர் யார்?


தினம் ஒரு ஹதீஸ்-242

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ، إِلاَّ مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 7280

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர என்று கூறினார்கள். மக்கள்,அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7280

Narrated Abu Huraira (ra):
Allah’s Messenger (sal) said, “All my followers will enter Paradise except those who refuse.” They said, “O Allah’s Messenger! Who will refuse?” He said, “Whoever obeys me will enter Paradise, and whoever disobeys me is the one who refuses (to enter it).
[Bukhari 7280]
Blogger Widget