அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கப்ரில் தண்டனை கிடைக்கச் செய்யும் பாவங்கள்...

தினம் ஒரு ஹதீஸ்-458

இறந்த உடலை அடக்கம் செய்து விட்டு கப்ரின் மேல் செடி நடும் பழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. இவ்வாறு நாம் செய்ய வேண்டுமென்பதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமுமில்லை. பின்வரும் ஹதீஸை தவறாகப் புரிந்து கொண்டு தான் அப்பழக்கத்தை சிலர் பின்பற்றுகின்றனர். இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்பு தகுதி. ஏனெனில் பிற மனிதர்களால் கப்ர் வேதனையின் சப்தத்தை அறிய இயலாது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால், அவர்களுக்கு அல்லாஹ் எடுத்துக் காட்டினான். ஏதும் தெரியாத நாம் அவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. அடுத்ததாக, ஸஹீஹ் முஸ்லிம் 5736 ல் இடம்பெறும் வேறொரு சம்பவ ஹதீஸில் கப்ரில் ஊன்றுவதான நிகழ்வு இடம்பெறவில்லை. மரக்கிளையை ஒடித்து இரு கப்ர் பக்கங்களிலும் வீசியெறியத் தான் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். இதன் படி பார்த்தால் கப்ர் செடி நடுபவர்கள் ஏன் கிளைகளை ஒடித்து வீசியெறிவதில்லை. மேலும் அதே ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸில் அச்சம்பவத்தின் தொடர்ச்சியாக நபி(ஸல்) அவர்கள் அவ்விரு கிளைகளும் உலராமல் இருக்கும்வரை அவ்விருவருக்கும் எனது பரிந்துரையின் பேரில் வேதனை இலேசாக்கப்பட வேண்டுமென நான் விரும்பினேன் என்று விளக்கமும் அளித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் விளக்கிய பின்பு தான் அதற்கான காரணம் சஹாபாக்களுக்கே தெரிந்தது. இதிலிருந்தே நபி (ஸல்) அவர்களுக்கான சிறப்பு தகுதி இது என்பதை விளங்கலாம். பிற மனிதர்களுக்கு இது பொருந்தாது. நாம் ஜனாஸா விஷயத்தில் மார்க்கம் கட்டளையிட்டதை செய்தால் மட்டும் போதுமானது. ஆகவே கப்ரில் மரம் வளர்க்கும் பழக்கமானது மார்க்கத்தில் இல்லாதது என்பதை விளங்கலாம். மரம் வளர்க்க ஆசைப்படுபவர்கள் அவர்கள் வீடுகள் , தோட்டங்கள் போன்ற பிற இடங்களில் வளருங்கள். அதற்கும் தர்மத்தின் நன்மை உண்டு. கப்ரின் மீது வளர்க்க வேண்டாம்.
حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ ‏"‏، ثُمَّ قَالَ ‏"‏ بَلَى، كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ ‏"‏‏.‏ ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا كِسْرَتَيْنِ، فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً‏.‏ فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ ‏"‏ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا أَوْ إِلَى أَنْ يَيْبَسَا     
216 ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ


நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக்குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று சொல்லிவிட்டு, ஆம்! (ஒரு வகையில் இறைவனிடம் அது பெரிய பாவச் செயல்தான்) இவ்விருவரில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும் போது (தமது அந்தரங்கத்தை) மறைக்காமலிலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறிவிட்டு, ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 
நூல்: புகாரி 216

Narrated Ibn `Abbas (ra):
Once the Prophet (sal) while passing through one of the graveyards of Medina heard the voices of two persons who were being tortured in their graves. The Prophet (sal) said, "These two persons are being tortured not for a major sin (to avoid)." The Prophet (sal) then added, "Yes! (they are being tortured for a major sin). Indeed, one of them never saved himself from being soiled with his urine while the other used to go about with calumnies (to make enmity between friends). The Prophet (sal) then asked for a green leaf of a date-palm tree, broke it into two pieces and put one on each grave. On being asked why he had done so, he replied, "I hope that their torture might be lessened, till these get dried."
[Bukhari 216]

ஜனாஸா சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

தொடர்புடைய பிற பதிவுகள்:

Blogger Widget