அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

முஸ்லிம் யார்? முஃமின் யார்?...

தினம் ஒரு ஹதீஸ்-519

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ     
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2627

"முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான். முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2627

Narrated Abu Hurairah (ra):
The Messenger of Allah (sal) said: "The Muslim is the one from (the harm of) whose tongue and hand (other) Muslims are safe, and the believer is the one with whom the people trust their blood and their wealth."
[Tirmidhi 2627]
நற்போதனை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும்தீமைகள் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

அழகிய முன் மாதிரி -8

தினம் ஒரு ஹதீஸ்-461

حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ رَجُلًا قَالَ : يَا مُحَمَّدُ ، يَا سَيِّدَنَا وَابْنَ سَيِّدِنَا ، وَخَيْرَنَا وَابْنَ خَيْرِنَا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا أَيُّهَا النَّاسُ ، عَلَيْكُمْ بِتَقْوَاكُمْ ، وَلَا يَسْتَهْوِيَنَّكُمْ الشَّيْطَانُ ، أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ، وَاللَّهِ مَا أُحِبُّ أَنْ تَرْفَعُونِي فَوْقَ مَنْزِلَتِي الَّتِي أَنْزَلَنِي اللَّهُ عَزَّ وَجَلَّ  
12313 ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ


முஹம்மதே! எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் (நபி  (ஸல்) அவர்களிடம்) கூறினார். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள், மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்   (ரலி)
நூல்: அஹ்மத் 12313

Anas bin Malik (ra) reported:
A man said, “O Muhammad! O master, son of our master! O best of us, son of the best of us!” The Messenger of Allah (sal) said, “O people, you must be mindful of Allah and do not allow Satan to deceive you. I am Muhammad the son of Abdullah, the servant of Allah and his messenger. By Allah, I do not love for you to raise my position above what Allah the Exalted has granted me.
[Ahmad 12313]

'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் ' அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று 'நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி)  அவர்கள் சொல்ல கேட்டுள்ளதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 3445)
அழகிய முன் மாதிரி சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 123456, 7

Blogger Widget

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -15

தினம் ஒரு ஹதீஸ்-460

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا يَزِيدُ أَبُو خَالِدٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَحْضُرْ أَجَلُهُ فَقَالَ عِنْدَهُ سَبْعَ مِرَارٍ أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عَافَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ الْمَرَضِ 
3106 ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ

மரணம் நெருங்காத ஒரு நோயாளியை ஒருவர் சந்திக்கச் சென்றால் ஏழு தடவை, அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம், அன் யஷ்ஃபியக (உனக்கு நிவாரணத்தைத் தர வேண்டுமென்று வலிமை மிகுந்த, அர்ஷுக்குச் சொந்தக்காரனான அல்லாஹ்விடம் கேட்கிறேன்) என்று கூறி பிரார்தித்தால்,  அல்லாஹ் அந்த நோயில் இருந்து அவருக்கு நிவாரணம் தராமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 3106

Narrated Ibn Abbas (ra): 
The Prophet (sal) said, "He who visits a sick person who is not on the point of death and supplicates seven times: As'alullahal-'Aleem Rabbal-'Arshil-'Aleem, an yashfiyaka (I ask Allah, the Mighty, the Lord of the mighty Throne, to cure you) Allah will certainly heal him from that sickness.
[Abudawud 3106]

 எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன்  63 : 11

அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி.

அல்குர்ஆன்  3 : 145

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.  
அல்குர்ஆன் 7:34

                                            தொடர்புடைய பிற பதிவுகள்:
நோயாளியையோ, இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் அவ்விடத்தில் நல்லதையே சொல்லுங்கள்…


துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12, 13, 14

Blogger Widget

தூய்மை இறைநம்பிக்கையில் பாதி...

தினம் ஒரு ஹதீஸ்-457

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا أَبَانٌ، حَدَّثَنَا يَحْيَى، أَنَّ زَيْدًا، حَدَّثَهُ أَنَّ أَبَا سَلاَّمٍ حَدَّثَهُ عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ ‏.‏ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلآنِ - أَوْ تَمْلأُ - مَا بَيْنَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَالصَّلاَةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا  
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 381


தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ  (ரலி)
நூல்: முஸ்லிம் 381

Abu Malik at-Ash'ari (ra) reported:
The Messenger of Allah (sal) said: Cleanliness is half of faith and al-Hamdu Liliah (Praise be to Allah) fills the scale, and Subhan Allah (Glory be to Allah) and Al-Hamdu Liliah (Praise be to Allah) fill up what is between the heavens and the earth, and prayer is a light, and charity is proof (of one's faith) and endurance is a brightness and the Holy Qur'an is a proof on your behalf or against you. All men go out early in the morning and sell themselves, thereby setting themselves free or destroying themselves.
[Muslim 381]

உளூ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

தொடர்புடைய பிற பதிவுகள்:

நன்மைகள் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும்,தீமைகள் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

மக்களில் சிறந்தவர் யார்? கெட்டவர் யார்?

தினம் ஒரு ஹதீஸ்-456

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ عَلَى أُنَاسٍ جُلُوسٍ فَقَالَ ‏"‏ أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ ‏"‏ ‏.‏ قَالَ فَسَكَتُوا فَقَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ فَقَالَ رَجُلٌ بَلَى يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا ‏.‏ قَالَ ‏"‏ خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ وَشَرُّكُمْ مَنْ لاَ يُرْجَى خَيْرُهُ وَلاَ يُؤْمَنُ شَرُّهُ    
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2194

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் மக்களுக்கு முன்னால் வந்து நின்று, உங்களில் சிறந்தவர் யார்? கெட்டவர் யார்? என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மக்கள்) அமைதியாக இருந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அதையே மூன்று முறை மீண்டும் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிறந்தவர் யார், கெட்டவர் யார் என்பதை எங்களுக்கு அறிவியுங்கள் என்று கூறினார். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்க்கப்படுமோ, தீமையான காரியங்கள் குறித்து பயப்படப்படாதோ அவர்தான் உங்களில் சிறந்தவர். மேலும், உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்க்கப்படாதோ, தீமையான காரியங்கள் பயப்படப்படுமோ அவர்தான் உங்களில் கெட்டவர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2194

Abu Hurairah (ra) narrated that the Messenger of Allah (sal) came across some people who were sitting, so he said: 'Shall I not inform you of the best of you from your worst?'" "They became silent, so he said that three times, then a man said: 'Of course, O Messenger of Allah! Inform us of the best among us from our worst.' He said: 'The best of you is the one whose goodness is hoped for, and people are safe from his evil. And the worst of you is he whose goodness is not hoped for, and people are not safe from his evil.'"
[Tirmidhi 2194]

நற்போதனை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும்,தீமைகள் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

இறைநம்பிக்கையாளரிடம் இருக்கக் கூடாத குணங்கள்...

தினம் ஒரு ஹதீஸ்-453

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِيءِ  
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 1977

குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளர் இருக்க மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: திர்மிதீ 1977

Abdullah (ra) narrated that the Messenger of Allah (sal) said: 
The believer is not a slanderer, one who curses a great deal, one who indulges in obscenity, one who in engages in foul talk
[Tirmidhi 1977]
தொடர்புடைய பிற பதிவுகள்:

நற்போதனை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும், தீமைகள் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

தூய்மையான ஆடையையே அணிய வேண்டும்...

தினம் ஒரு ஹதீஸ்-452

 حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مِسْكِينٌ، عَنِ الأَوْزَاعِيِّ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ وَكِيعٍ، عَنِ الأَوْزَاعِيِّ، نَحْوَهُ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَأَى رَجُلاً شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ ‏"‏ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ ‏‏ وَرَأَى رَجُلاً آخَرَ وَعَلَيْهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ ‏"‏ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ ‏  

 406ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ

நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வரும் போது பரட்டைத் தலையுடையவராக ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது ”இவர் தனது முடியைப் படிய வைக்கக் கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ள வில்லையா?” என்று கேட்டார்கள். வேறொரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக இருப்பதைப் பார்த்தார்கள். அப்போது ''இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?'' என்று  கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அபூதாவூத் 4062

Narrated Jabir ibn Abdullah (ra):

The Messenger of Allah (sal) paid visit to us, and saw a disheveled man whose hair was disordered. He said: Could this man not find something to make his hair lie down? He saw another man wearing dirty clothes and said: Could this man not find something to wash his garments with.
[Abudawud 4062]


தொடர்புடைய பிற பதிவு: மண்ணறை வேதனையில் அதிகமானது…

Blogger Widget

முழுமையான இறைநம்பிக்கை...

தினம் ஒரு ஹதீஸ்-451


 حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم  وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 13


"உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 13



Narrated Anas (ra):

Allah's Messenger (sal)  said, None of you will have faith till he wishes for his (Muslim) brother what he likes for himself.

[Bukhari 13]

இறைநம்பிக்கை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது...


தினம் ஒரு ஹதீஸ்-445

وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ الأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ قَالَ وَكَانَتْ عَائِشَةُ إِذَا عَمِلَتِ الْعَمَلَ لَزِمَتْهُ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1436

நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நற்செயலைச் செய்தால் அதை விடாமல் (தொடர்ந்து) செய்து வருவார்கள்” என்று அறிவிப்பாளர் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1436

‘A’isha (ra) reported Allah’s Messenger (sal) as saying: The acts most pleasing to Allah are those which are done continuously, even if they are small. The sub narrator Qasim bin Muhammad (rah) said, “when ‘A’isha (ra) did any act she did it continuously”.
[Muslim 1436]
Blogger Widget

போதுமென்ற மனம்...

தினம் ஒரு ஹதீஸ்-442

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ أَخْبَرَنِي عُرْوَةُ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ قَالَ هَذَا الْمَالُ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ قَالَ لِي يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 6441

நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “ஹகீமே!இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறவருக்கு அதில் சுபிட்சம் வழங்கப்படும். மனதை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் சுபிட்சம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல்கை தான் கீழ்க்கையை விடச் சிறந்ததாகும்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல்: புகாரி 6441

Narrated Hakim bin Hizam (ra):
I asked the Prophet (sal) (for some money) and he gave me, and then again I asked him and he gave me, and then again I asked him and he gave me and he then said, O Hakim! “This wealth is (like) green and sweet (fruit), and whoever takes it without greed, Allah will bless it for him, but whoever takes it with greed, Allah will not bless it for him, and he will be like the one who eats but is never satisfied. And the upper (giving) hand is better than the lower (taking) hand.
[Bukhari 6441]

தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget

அல்லாஹ்வை நினைவுகூருதல்....


தினம் ஒரு ஹதீஸ்-440

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لاَ يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَىِّ وَالْمَيِّتِ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1429

அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429

It was narrated Abu Musa (ra) that The Prophet (sal) as saying, “The house in which remembrance of Allah is made and the house in which Allah is not remembered are like the living and the dead.
[Muslim 1429]
Blogger Widget

தன்னைத் தானே நோவினை செய்து கொள்ளக் கூடாது...


தினம் ஒரு ஹதீஸ்-436

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلاَ يَقْعُدَ وَلاَ يَسْتَظِلَّ وَلاَ يَتَكَلَّمَ وَيَصُومَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 6704

நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக் கொண்டிருந்த போது ஒருவர் (வெயிலில்) நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டுள்ளார்‘ என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு உத்தரவிடுங்கள்; அவர் பேசட்டும், நிழல் பெறட்டும், உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்‘ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 6704

Narrated Ibn `Abbas (ra):
While the Prophet (sal) was delivering a sermon, he saw a man standing, so he asked about that man. They (the people) said, “It is Abu Israil who has vowed that he will stand and never sit down, and he will never come in the shade, nor speak to anybody, and will fast.” The Prophet (sal) said, “Order him to speak and let him come in the shade, and make him sit down, but let him complete his fast.
[Bukhari 6704]
ஜுமுஆ சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்..
Blogger Widget

அழகிய முன் மாதிரி -7


தினம் ஒரு ஹதீஸ்-435

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ – عَنْ ثَابِتٍ، قَالَ قَالَ أَنَسٌ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى غِلْمَانٍ يَلْعَبُونَ فَسَلَّمَ عَلَيْهِمْ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4528

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களைக் கடந்து சென்றபோது, அ(ச்சிறு)வர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 4528

Narrated Anas (ra):
The Messenger of Allah (sal) came to some children who were playing: He saluted them.
[Abudawud 4528]
அழகிய முன் மாதிரி சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 123,456
Blogger Widget