அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஒரே நாளில் 1000 நன்மைகள் பெற / 1000 பாவங்கள் மன்னிக்கப்பட...


தினம் ஒரு ஹதீஸ்-29

ஒரே நாளில் 1000 நன்மைகள் பெற அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென விரும்புகிறீர்களா? மிக எளிது. 100 முறைசுப்ஹானல்லாஹ் என்று திக்ர் செய்யுங்கள்.
حديث مرفوع أخبرنا حاجب بن أحمد، أنا عبد بن هاشم الطوسي، أنا يحيى بن سعيد القطان, أنا موسى الجهني, عن مصعب بن سعد, عن أبيه سعد بن أبي وقاص, قال : قال رسول الله صلى الله عليه وسلم لجلسائه أيعجز أحدكم أن يكسب كل يوم ألف حسنة ؟ فقال رجل من جلسائه كيف يكسب أحدنا ألف حسنة ؟ قال يسبح مائة تسبيحة – ﺳﺒﺤﺎﻥ ﺍﻟﻠﻪ -, فتكتب له ألف حسنة, ويكفر عنه ألف خطيئة
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5230

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் , “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,”அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்று கூறித் துதிக்க , அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் பாவங்கள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 5230

Narrated Sa`ad bin Abi Waqqas (ra):
We were in the company of Allah’s Messenger (sal) that he said: “Is one amongst you powerless to get one thousand virtues every day?“. Amongst those who had been sitting there, one asked: ‘How one amongst us can get one thousand virtues every day?‘ He said: “Recite: “Subhan Allah” (Hallowed be Allah) ‘one hundred times for (by reciting them) one thousand virtues are recorded (to your credit) or one thousand vices are blotted out“.
[Muslim 5230]
Blogger Widget