அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

எதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால் சொர்க்கம் உறுதி…?


தினம் ஒரு ஹதீஸ்-406

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ، زَيْدُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ الإِسْكَنْدَرَانِيُّ-، حَدَّثَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ قَالَ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 1309

ரளீத்து பில்லாஹி ரப்பன், வபில் இஸ்லாமி தீனன், வபி முஹம்மதின் ரசூலன்(அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை (அல்லாஹ்வின்) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்) என்று எவர் (உளப்பூர்வமாகக்) கூறுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)
நூல்: அபூதாவூத் 1309

Abu Sa’id al-Khudri (ra) reported the Messenger of Allah (sal) as saying: If anyone says “Razitu Billahi Rabban, wa bil-Islami deenan wa bi Muhammadin Rasulan” (I am pleased with Allah as Lord, with Islam as religion and with Muhammad as Apostle) paradise was guaranteed to him.
[Abudawud 1309]

தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget