அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இறந்த பெற்றோருக்காக பிள்ளைகள் செய்யும் சிறந்த தர்மம்...

தினம் ஒரு ஹதீஸ்-497

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ قُلْتُ فَأَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْىُ الْمَاءِ     
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 3664

"அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யலாமா?  என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். எது சிறந்த தர்மம்? என்று கேட்டேன். குடிநீர் வழங்குதல் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)
நூல்: நஸாயீ 3664

It was narrated that Sa'd bin 'Ubadah (ra) said: "I said: 'O Messenger of Allah, my mother has died; shall I give in charity on her behalf?' He said: 'Yes.' I said: 'What kind of charity is best?' He said: 'Providing drinking water.'
[Nasa'i 3664]

தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget