அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ்விற்கு இணைவைக்காதவருக்கு வாரந்தோறும் கிடைக்கும் மன்னிப்பு...

தினம் ஒரு ஹதீஸ்-498

حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلاَّ رَجُلٌ كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ‏:‏ أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا‏.
ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ ﻟﻠﺒﺨﺎﺭﻱ 411

ஒவ்வொரு வியாழக்கிழமையும், திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் அல்லாஹ் மன்னிப்பு அளிக்கின்றான்;   தனது சகோதரரிடம்  பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. இவ்விருவரும் சமாதானமாகிக் கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்  என்று கூறப்படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 411

Abu Hurayra (ra) reported that the Messenger of Allah (sal) said, “The gates of the Garden are opened on Mondays and Thursdays. Every person who does not associate anything with Allah is forgiven except for someone who has enmity between existing between him and another man. It is said, 'Leave these two until they make peace.
[Bukhari / al-Adab al-Mufrad 411]

மேலும், ஷிர்க் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget