அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழ செல்லும்முன் கழிப்பிடம் செல்லும் தேவை ஏற்பட்டால்...

தினம் ஒரு ஹதீஸ்-478

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ، أَنَّهُ خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا وَمَعَهُ النَّاسُ وَهُوَ يَؤُمُّهُمْ فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَقَامَ الصَّلاَةَ صَلاَةَ الصُّبْحِ ثُمَّ قَالَ لِيَتَقَدَّمْ أَحَدُكُمْ ‏.‏ وَذَهَبَ إِلَى الْخَلاَءِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَذْهَبَ الْخَلاَءَ وَقَامَتِ الصَّلاَةُ فَلْيَبْدَأْ بِالْخَلاَءِ      
88 ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ

"அப்துல்லாஹ் பின் அர்கம் (ரலி) அவர்கள் ஹஜ் செய்வதற்கோ அல்லது உம்ராவுக்காகவோ புறப்பட்டார்கள்.  அவர்களுடன் சென்றிருந்த மக்களுக்கு அவரே தொழுகை நடத்துவார்கள்.  ஒரு நாள் அவர் சுபுஹ் தொழுகை நடத்தத் தயாரானார்கள்.  அப்போது அவர்கள் மக்களை நோக்கி, “உங்களில் ஒருவர் தொழுகை நடத்த முன் வாருங்கள்!  ஏனெனில் தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டியது  உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்குச் செல்வாராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்று இருக்கிறேன் என்று கூறிவிட்டு, கழிப்பிடத்திற்குச் சென்று விட்டார்கள்" என உர்வா பின் ஜுபைர் (ரலி) அவர்கள் தமது தந்தை (ஜுபைர் (ரலி) அவர்கள்) வழியாக அறிவிக்கிறார்கள்.
நூல்: அபூதாவூத் 88

Urwah bin zubair (ra) reported on the authority of his father (Zubair (ra)) that Abdullah ibn al-Arqam (ra) travelled for performing hajj or umrah. He was accompanied by the people whom he led in prayer. One day when he was leading them in the fajr prayer, he said to them: One of you should come forward. He then went away to relieve himself. He said: I heard the Messenger of Allah (sal) say: When any of you feels the need of relieving himself while the congregational prayer is ready, he should go to relieve himself. 
Blogger Widget