அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கழிவறையில் நுழையும் போது, வெளியேறும் போது ஓத வேண்டியவை...


தினம் ஒரு ஹதீஸ்-17

கழிவறைக்குள் நுழையும் போது ஓத வேண்டிய துஆ
கழிவறையில் இருந்து வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ
أخبرنا أحمد بن عبدة الضبي البصري حدثنا حماد بن زيدعن عبد العزيز بن صهيبعن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث
رواه ﺍﻟﺘﺮﻣﺬﻱ 6
حدثنا محمد بن إسمعيل حدثنا مالك بن إسمعيلعن إسرائيل بن يونسعن يوسف بن أبي بردة عن أبيهعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا خرج من الخلاء قالغفرانك
رواه ﺍﻟﺘﺮﻣﺬﻱ 7
நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழைந்தால் “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” (இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 6
நபி (ஸல்) அவர்கள் கழிவறையில் இருந்து வெளியேறும் போது “ஃகுப்ரான(க்)க((இறைவா!) உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதீ 7
Narated Anas bin Malik (ra):
When The Prophet (sal) entered the toilet, he used to say: “Allaahumma inni a’oodhu bika min al-khubsi wa’l-khabaa’isi” (O Allaah!, I seek refuge with You from evil and from the male and female devils).
[Tirmidhi 6]
Narrated ‘Aa’ishah (ra) said:
When the Prophet (sal) exited the toilet, he used to say, “Ghufraanaka” ((O Lord! I ask you for) Your forgiveness).
[Tirmidhi 7]
Blogger Widget