அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இறந்த உயிரினத்தின் தோலைப் பயன்படுத்துதல்..


தினம் ஒரு ஹதீஸ்-479

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَيِّتَةٍ كَانَ أَعْطَاهَا مَوْلَاةً لِمَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا   ‏" 
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 4235

நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட ஆடு இறந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அந்த ஆட்டைக் கடந்து சென்றபோது, 'இதன் தோலை நீங்கள் (பதப்படுத்தி) பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா?' என்று கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! இது செத்த ஆடாயிற்றே!' என்றனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது‘ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: நஸாயீ 4235

Narrated Ibn Abbas (ra): 
The Messenger of Allah  (sal) passed by a dead sheep that he had given to a freed slave woman of Maimunah (ra), the wife of the Prophet (sal). He said: Why dont you make use of its hide? They said: O Messenger of Allah, it is dead meat. The Messenger of Allah  (sal) said: It is only forbidden to eat it. 
[Nasa'i 4235]

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:173

தொடர்புடைய பிற பதிவுகள்: ஹராமானவைகள்..                          
                                  
Blogger Widget