அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஆதம் (அலை) அவர்கள் நபியா?

தினம் ஒரு ஹதீஸ்-522

أَخْبَرَنَا أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجُوَيْهِ ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ ، عَنْ أَخِيهِ زَيْدِ بْنِ سَلَّامٍ ، قَالَ : سَمِعْتُ أَبَا سَلَّامٍ ، قَالَ : سَمِعْتُ أَبَا أُمَامَةَ ، أَنَّ رَجُلًا ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ أَنَبِيٌّ كَانَ آدَمُ ؟ قَالَ : نَعَمْ ، مُكَلَّمٌ ، قَالَ : فَكَمْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ ؟ قَالَ : عَشَرَةُ قُرُونٍ  
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 6296

ஒரு மனிதர் (நபி(ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா?" என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம், அவர் (அல்லாஹ்வுடன்) நேரடியாக உரையாடியவர்” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "பத்து நூற்றாண்டுகள்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 6296

Narrated Abu Umamah (ra):
A man asked the Prophet (sal), O Messenger of Allah, was Adam (alai) a Prophet?” He said, “Yes, and Allah spoke to him.” The man asked, “How much (time) was there between him and Nooh (alai)?” He said, “Ten centuries.” 
[Ibnhibban 6296]
பின்னர்  அவரை  அவரது  இறைவன்  தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து  நேர்வழி காட்டினான்.   இருவரும்  ஒட்டுமொத்தமாக இங்கிருந்து  இறங்குங்கள்!  உங்களில்  சிலர் மற்றும்  சிலருக்கு பகைவர்களாவீர்கள்.  என்னிடமிருந்து  உங்களுக்கு  நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப்  பின்பற்றுபவர்  வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.
அல்குர்ஆன் 20:122,123

Blogger Widget