அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ்விடம் கூலியையும், மக்களிடம் புகழையும் எதிர்ப்பார்த்து நற்செயல் புரிந்தால்...

தினம் ஒரு ஹதீஸ்-521

أَخْبَرَنَا عِيسَى بْنُ هِلاَلٍ الْحِمْصِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ شَدَّادٍ أَبِي عَمَّارٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَرَأَيْتَ رَجُلاً غَزَا يَلْتَمِسُ الأَجْرَ وَالذِّكْرَ مَا لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ شَىْءَ لَهُ ‏"‏ ‏.‏ فَأَعَادَهَا ثَلاَثَ مَرَّاتٍ يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ شَىْءَ لَهُ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ لاَ يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا كَانَ لَهُ خَالِصًا وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ     
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 3140

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) கூலியையும், (மக்களிடம்) புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?; அவருக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்தார்கள். அவர் இதையே திரும்ப திரும்ப மூன்று தடவை கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்துவிட்டு, “அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: நஸாயீ 3140

It was narrated that Abu 'Umamah (ra) said: "A man came to the Prophet (sal) and said: 'What do you think of a man who fights seeking reward and fame - what will he have?' The Messenger of Allah (sal) said: 'He will not have anything.' He repeated it three times, and the Prophet (sal) said to him: 'He will not have anything.' Then he said: 'Allah does not accept any deed, except that which is purely for Him, and seeking His Face.'
[Nasa'i 3140]

தொடர்புடைய பிற பதிவுகள்: 
Blogger Widget