அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

வெள்ளிக்கிழமையும் ஸலவாத்தும்...


தினம் ஒரு ஹதீஸ்-77

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ ، فِيهِ خُلِقَ آدَمُ ، وَفِيهِ قُبِضَ ، وَفِيهِ النَّفْخَةُ ، وَفِيهِ الصَّعْقَةُ ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّقَالَ : قَالُوا يَا رَسُولَ اللَّهِ ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ ؟ يَقُولُونَ : بَلِيتَ ، فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَجْسَادَ الْأَنْبِيَاءِ
رواه أبو داود 885

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவரது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் தான் உலக அழிவுக்கான ஸூர் ஊதப்பட்டு, மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாகக் கூறுங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் (மலக்குகள் மூலம்) எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? உங்கள் உடல் தான் மண்ணோடு அழிந்து விட்டிருக்குமே!” என்று நபித்தோழர்கள் கேட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 885

Narrated Aws ibn Aws (ra): The Prophet (sal) said:
Among the most excellent of your days is Friday; on it Adam (alai) was created, on it he died, on it the last trumpet will be blown, and on it the shout will be made, so invoke more blessings on me that day, for your blessings will be submitted to me. The people asked: O Apostle of Allah!, how can it be that our blessings will be submitted to you while your body is decayed? He replied: Allah, the Exalted, has prohibited the earth from consuming the bodies of Prophets.
[Abudawud 885]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget