அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

எண்ணத்தைப் பொறுத்தே அமல்களுக்கான கூலியும் கிடைக்கும்…


தினம் ஒரு ஹதீஸ்-213

நோன்பானது அல்லாஹ்விற்காக, அவனிடம் மட்டும் அதற்கான நன்மை கிடைக்க வேண்டுமென்ற தூய எண்ணத்தோடு வைக்கப்பட வேண்டும், மாறாக உடல் மெலிய வேண்டுமென்றோ, ஆரோக்கியத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வைத்தால் அந்நோக்கம் நிறைவேறுமே தவிர, அல்லாஹ்விடம் அதனால் எவ்வித நன்மையும் கிடைக்காது. நோன்பு மட்டுமல்ல தொழுகை உட்பட அனைத்து அமல்களுமே அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்தோடு மட்டுமே செய்யப்பட வேண்டும், அவ்வெண்ணத்தில் வேறு காரணங்களையும் கலந்தால் மறுமையில் கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1

எண்ணத்தைப் பொறுத்தே செயல்(களுக்கான கூலி) அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியபடி தான் (அதற்கான பலனும்) கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றுள்ளதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.
நூல்: புகாரி 1

‘Umar bin al-Khattab (ra) said on the minbar, I heard the Messenger of Allah (sal) said, “The (reward of) deeds depends upon the intentions and every person will get the reward according to what he has intended. So whoever emigrated for worldly benefits or for a woman to marry, his emigration was for what he emigrated for.
[Bukhari 1]

நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…


Blogger Widget