அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மண்ணறை வேதனை பற்றிய அல்குர்ஆன் வசனம்..

தினம் ஒரு ஹதீஸ்-514

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا السَّمْحِ، حَدَّثَهُ عَنِ ابْنِ حُجَيْرَةَ،  عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ «الْمُؤْمِنُ فِي قَبْرِهِ فِي رَوْضَةٍ، وَيُرَحَّبُ لَهُ قَبْرُهُ سَبْعِينَ ذِرَاعًا، وَيُنَوَّرُ لَهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، أَتَرَوْنَ فِيمَا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ»: {فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا، وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى} [طه: 124]، قَالَ: «أَتَدْرُونَ مَا الْمَعِيشَةُ الضَّنْكُ؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «عَذَابُ الْكَافِرِ فِي قَبْرِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَيُسَلَّطُ عَلَيْهِمْ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا، أَتَدْرُونَ مَا التِّنِّينُ؟»، قَالَ: «تِسْعَةٌ وَتِسْعُونَ حَيَّةً لِكُلِّ حَيَّةٍ سَبْعَةُ رُءُوسٍ يَنْفُخُونَ فِي جِسْمِهِ وَيَلْسَعُونَهُ، وَيَخْدِشُونَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» 
6644 مسند أبي يعلى 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கையாளர் தனது மண்ணறையில் பசுமையான தோட்டத்தில் இருப்பார். எழுபது முழம் வரைக்கும் அவருடைய மண்ணறை விசாலமாக்கப்படும். பௌர்ணமி இரவில் சந்திரனின் ஒளியைப் போல் அவருக்கு வெளிச்சம் தரப்படும் என்று  கூறிவிட்டு, "எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம் (அல்குர்ஆன் 20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்கு தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும், அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறைமறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யபடுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவனுக்கு எதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அந்த பாம்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை தொண்ணூற்று ஒன்பது பாம்புகளாகும். அவற்றில் ஒவ்வொரு பாம்புக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் அவை (விஷக்காற்றை) ஊதிக் கொண்டும், அவனை தீண்டிக் கொண்டும், ஊர்ந்து கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னத் அபீயஃலா 6644

Abu Hurairah (ra) narrated that The Messenger of Allah (sal) said, “Verily, the believer in his grave is within a green meadow. His grave welcomes him with seventy cubits of space and it is illuminated for him like the full moon on a clear night. Do you know why this verse was revealed: He will have a confined life and We will raise him blind on the Day of Resurrection (Al-Quran 20:124)? Do you know what is a confined life?” They said, “Allah and His messenger know best.” The Prophet (sal) said, “It is the punishment of an unbeliever in his grave. By the One in whose hand is my soul, ninety-nine dragons will be given authority over him. Do you know what the Dragon is? It is ninety-nine serpents, each serpent with seven heads stinging him and maiming him until the Day of Resurrection.” 
[Musnad Abi Yaʽla 6644]
ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். யுகமுடிவு நேரம் வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்).
அல்குர்ஆன் 40:45,46
ஜனாஸா சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

Blogger Widget