அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டிய துஆ -1


தினம் ஒரு ஹதீஸ்-33

و حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ وَابْنُ نُمَيْرٍ وَأَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ وَكِيعٍ قَالَ أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَائِشَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ يَقُولُاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1030

உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்:அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம், வமின் அதாபில் கப்ரி, வமின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி, வமின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால். (இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலும் இறக்கும்போது ஏற்படும் சோதனையிலிருந்தும், மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்)என வேண்டுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1030

Abu Hurairah (ra) reported: The Messenger of Allah (sal) said:
When anyone of you has done his Tashahhud during Salat (prayer), he should seek refuge in Allah against four things and say: “Allahumma inni a’udhu bika min ‘adhabi jahannam, wa min ‘adhabil-qabr, wa min fitnatil-mahya wal-mamat, wa min sharri fitnatil-masihid-dajjal(O Allah! I seek refuge in You from the torment of Hell, from the torment of the grave, from the trials of life and death, and from the mischief of Al-Masih Ad-Dajjal (Antichrist).
[Muslim 1030]
Blogger Widget