அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நற்பண்புடையவருக்கு மறுமையில் கிடைக்கும் அந்தஸ்து..

தினம் ஒரு ஹதீஸ்-508

ﺣَﺪَّﺛَﻨَﺎ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ‏:‏ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ‏:‏ حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْهَادِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ أُخْبِرُكُمْ بِأَحَبِّكُمْ إِلَيَّ، وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ‏؟‏ فَسَكَتَ الْقَوْمُ، فَأَعَادَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، قَالَ الْقَوْمُ‏:‏ نَعَمْ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ أَحْسَنُكُمْ خُلُقًا
ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ ﻟﻠﺒﺨﺎﺭﻱ 272

'உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரென்று நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகும் அதே கேள்வியை இரண்டு அல்லது மூன்று முறை கேட்டார்கள். உடனே மக்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதரே (அறிவியுங்கள்)' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களில் நற்பண்புடையவரே" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 272

It was narrated from Abdullah bin ‘Amr (ra) that the Prophet (sal) said: "Shall I tell you about who is most beloved to me and the one who will be seated closest to me on the Day of Judgment?" The people were silent, so he repeated that two or three times. Then the people said, "Yes, O Messenger of Allah." He said, "The one among you with the best character."
[Bukhari / al-Adab al-Mufrad 272]

Blogger Widget