அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் சேர்ப்பது எது?, நரகத்தில் சேர்ப்பது எது?...

தினம் ஒரு ஹதீஸ்-509

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ ‏"‏ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ ‏"‏ ‏.‏ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ ‏"‏ الْفَمُ وَالْفَرْجُ ‏"‏  
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2004

மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “அல்லாஹ்வின் மீதான இறையச்சமும், நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும், மர்மஸ்தானமும்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2004

Abu Hurairah (ra) narrated that the Messenger of Allah (sal) was asked about that for which people are admitted into Paradise the most, so he said: "Taqwa of Allah, and good character." And he was asked about that for which people are admitted into the Hell the most, and he said: " The mouth and the private parts."
[Tirmidhi 2004]


சொர்க்கம் சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண இங்கேயும்நரகம் சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget