அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜோதிடம்...


தினம் ஒரு ஹதீஸ்-15

ஒருவரது எதிர்காலம் என்பது மறைவான விஷயங்களில் ஒன்று. அத்தகைய மறைவான விஷயத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் அறிய முடியாது. ஆனால் சிலர் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டி ஜோதிடர்களிடம் செல்கிறார்கள். நம்மைப் போன்ற மனிதனால் எப்படி எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று சிறிதும் அவர்கள் சிந்திப்பதில்லை. இதில் சில முஸ்லிம்களும் அடங்குவர். இத்தகைய நம்பிக்கை சாதாரணமானது அல்ல. இது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும் என்பதை விளங்கி இப்பாவத்திலிருந்து விலக வேண்டும்.
حَدَّثَنَا عَفَّانُ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ : أَخْبَرَنَا حَكِيمٌ الْأَثْرَمُ، عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَة، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ”من أتى عرافاً أو كاهناً فصدقه بما يقول، فقد كفر بما أنزل على محمد “
‏ ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 9171

ஒருவன் குறி கூறுபவனிடம் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்வதாக கூறுபவனிடம் (ஜோதிடன்) சென்று அவன் கூறுபவற்றை நம்பினால், நிச்சயமாக அவன் முஹம்மதாகிய எனக்கு அருளப்பட்ட(குர்ஆன் என்னும் வேதத்)தை நிராகரித்தவன் ஆவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல் : அஹ்மத் 9171

Naratted Abu Huraira (ra):
The Messenger of Allah (sal) said: “Whoever approaches an oracle or fortune-teller and believes in what he says, has disbelieved in what was revealed to Muhammad. (i.e, he has disbelieved in the Qur’an)
[Ahmad 9171]
Blogger Widget