அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தல்,,,

தினம் ஒரு ஹதீஸ்-12

இன்று சில முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளின் மீதும் சத்தியம் செய்யும் பழக்கமுடையவர்களாக உள்ளனர். அதிலும் குர்ஆன் மீது சத்தியம் செய்வது பரவலாகக் காணப்படுகிறது. இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகையோர் ஷிர்க்கின் பிடியில் உள்ளனர்.
حدثنا قتيبة حدثنا أبو خالد الأحمر عن الحسن بن عبيد الله عن سعد بن عبيدة أن بن عمر سمع رجلا يقول لا والكعبة فقال بن عمر لا يحلف بغير الله فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : من حلف بغير الله فقد أشرك
رواه الترمذي 1455

ஒரு மனிதர் ‘கஃபாவின் மேல் ஆணையாக’ என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் செவியுற்றவுடன் ‘அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது’ என்று கூறினார்கள். மேலும், ‘யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்’ எனவும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் உபைதா (ரஹ்)
நூல்: திர்மிதீ 1455

Sa’d bin ‘Ubaidah (rh) narrated that Ibn ‘Umar (ra) heard a man saying: “By the Ka’bah” so Ibn ‘Umar (ra) said: “Nothing is sworn by other than Allah, for I heard the Messenger of Allah (sal) say: ‘Whoever swears by other than Allah, he has committed Shirk.
[Tirmidhi 1455]
Blogger Widget