அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

உண்பதற்கு ஹராமானவைகளை வியாபாரம் செய்யவும் கூடாது...

தினம் ஒரு ஹதீஸ்-470

حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ بِشْرَ بْنَ الْمُفَضَّلِ، وَخَالِدَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَاهُمُ - الْمَعْنَى، - عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ بَرَكَةَ، قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ بَرَكَةَ أَبِي الْوَلِيدِ، ثُمَّ اتَّفَقَا - عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسًا عِنْدَ الرُّكْنِ - قَالَ - فَرَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَضَحِكَ فَقَالَ ‏"‏ لَعَنَ اللَّهُ الْيَهُودَ ‏"‏ ‏.‏ ثَلاَثًا ‏"‏ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمُ الشُّحُومَ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَىْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ 

3029 ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவில் உள்ள ஹஜ்ருல் அஸ்வத் எனும்) கருப்புக் கல்லுக்கு அருகில்  அமர்ந்திருக்கையில்  கண்டேன். அப்போது அவர்கள் தமது பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தி சிரித்தார்கள். பின், “அல்லாஹ்வின் சாபம் யூதர்களின் மீது உண்டாகட்டும்!” என்று மூன்று முறை கூறி விட்டு, ”அவர்கள் (யூதர்கள்) மீது கொழுப்பை அல்லாஹ் தடை (ஹராம்) ஆக்கியிருந்தான். ஆனால் அவர்களோ அதை விற்று அதன் மூலம் வரும் கிரையத்திலிருந்து உண்ணலானார்கள். ஒரு சமுதாயத்தின் மீது ஒரு பொருளை உண்பதற்கு அல்லாஹ் தடுத்து விட்டால், அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 3029

Narrated Ibn Abbas (ra): 

I saw the Messenger of Allah (sal) sitting near the Black stone (Ka'bah - Hajar al-Aswad). He raised his eyes towards the heaven, and laughed, and he said: May Allah curse the Jews! He said this three times. Allah declared unlawful for them the fats; they sold them and they enjoyed the price they received for them. When Allah declared eating of thing forbidden for the people, He declares it price also forbidden for them.
[Abudawud 3029]

தொடர்புடைய பிற பதிவுகள்:
அதிகம் உண்டால் போதை தரக்கூடியதில் குறைவானதும் ஹராமே…

இவ்வுலகில் போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு மறுமையில் கிடைப்பது…

மதுவும், அல்லாஹ்வின் சாபமும்…
Blogger Widget