அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகையின் இறுதி அமர்வில் கேட்கும் துஆ..

தினம் ஒரு ஹதீஸ்-468

தொழுகையின் இறுதி அமர்வில் அத்தஹியாத்ஸலவாத் ஓதிய பின்பாக நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள துஆக்களை ஓதிய பின்பாக இம்மை , மறுமைக்கு நல்லதைப் பயக்கும் நாம் விரும்பும் எதை வேண்டுமானாலும் அல்லாஹ்விடம் அவரவர் தாய்மொழியிலேயே கேட்கலாம். மேலும், குறிப்பாக அவ்வேளையில் துஆ கேட்பதை ஒவ்வொரு ஜுமுஆ தொழுகையிலும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், ஏனெனில் வெள்ளிக்கிழமையில் துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் ஒன்று உள்ளது. அது ஜுமுஆ தொழுகையின் அத்தஹியாத் அமர்வில் துஆ கேட்கும் நேரம் என்று நபிமொழிகளில் வந்துள்ளது.

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ، أَنَّ عَمْرَو بْنَ مَالِكٍ الْجَنْبِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَدْعُو فِي صَلاَتِهِ فَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عَجِلَ هَذَا ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ ‏"‏ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ اللَّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ لِيُصَلِّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ لِيَدْعُ بَعْدُ بِمَا شَاءَ   
‎‏ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 3424
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ الْمَوْصِلِيُّ، عَنِ الْمُعَافَى، عَنِ الأَوْزَاعِيِّ، ح وَأَنْبَأَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَائِشَةَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ ثُمَّ يَدْعُو لِنَفْسِهِ بِمَا بَدَا لَهُ    
‎1294 ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப் படுத்தாமலும் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வை அவர் புகழ்ந்து கண்ணியப் படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஃபளாலா பின் உபைத் (ரலி)
நூல்: திர்மிதீ 3424
உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நரகத்தின் வேதனை, மண்ணறையின் வேதனை, வாழ்வின் சோதனை மற்றும் இறக்கும்போது ஏற்படும் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கு ஆகிய நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும், பின்னர் அவர் விரும்புவதை தனக்காகப் பிரார்த்திக்கட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ 1294
Narrated Fazhalah bin Ubaid (ra):
The Prophet (sal) heard a man supplicating in his prayer but he did not send Salawat upon the Prophet (sal), so the Prophet (sal) said: ‘This one has rushed.’ Then he called him and said to him, or to someone other than him: ‘When one of you performs prayer, then let him begin by expressing gratitude to Allah and praising Him. Then, let him send Salawat upon the Prophet, then let him supplicate after that, whatever he wishes.
[Tirmidhi 3424]


தொடர்புடைய பதிவுகள்:
அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டிய துஆ -3

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -5

மேலும், தொழுகை சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும், துஆ சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.

Blogger Widget