அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டிய துஆ -2


தினம் ஒரு ஹதீஸ்-34

حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن يزيد بن أبي حبيب، عن أبي الخير، عن عبد الله بن عمرو، عن أبي بكر الصديق رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم علمني دعاء أدعو به في صلاتي قال قل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك، وارحمني إنك أنت الغفور الرحيم
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 834

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன் , வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்” (இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய்)என்று கூறுங்கள்! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி)
நூல்: புகாரி 834

Narrated Abu Bakr As-Siddeeq (ra):
I asked Allah’s Messenger (sal) to teach me an invocation so that I may invoke Allah with it in my Salaat (prayer). He told me to say, “Allaahumma innee zhalamtu nafsi zhulman kasheeran wa laa yaghfirudh-dhunuuba illa anta, faghfirli maghfiratan min ‘indika, war-hamnee innaka antal-Ghafuurur-Raheem” (O Allah! I have done great Dhulm (injustice) to myself and none except You forgives sins, so please forgive me and be Merciful to me as You are the Oft-Forgiver, the Most Merciful.)
[Bukhari 834]
Blogger Widget