அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கியாமத் நாளின் அடையாளங்கள் -11


தினம் ஒரு ஹதீஸ்-443

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا أُسْنِدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ، فَانْتَظِرِ السَّاعَةَ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 6496

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு மனிதரிடம்), ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்‘ என்று கூறினார்கள். அவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?‘ என்று கேட்டார். அதற்கு, “(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்‘ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6496

Narrated Abu Huraira (ra):
Allah’s Messenger (sal) said, “When honesty is lost, then wait for the Hour.” It was asked, “How will honesty be lost, O Allah’s Messenger?” He (the Prophet (sal)) said, “When authority is given to those who do not deserve it, then wait for the Hour.
[Bukhari 6496]

கியாமத் நாளின் அடையாளங்கள் சம்பந்தமான முந்தைய பதிவுகள்: 1,2,3,4,5,6,7,8,9,10
மேலும், தொடர்புடைய பிற பதிவு: ஜிஹாதில் சிறந்தது…
Blogger Widget