அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சபை ஒழுங்குகள் -3


தினம் ஒரு ஹதீஸ்-318

ஒருவர் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போது அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பி விட்டு விட்டு அந்த இடத்தில் நாம் அமருவதை மார்க்கம் தடைசெய்துள்ளது, அது போல் ஒருவர் அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து செல்கிறார், அப்போது நாம் அந்த இடத்தில் சென்று அமர்ந்திருக்கும் நிலையில், எழுந்து சென்றவர் அவ்விடத்திற்கு மீண்டும் வந்தால் நாம் அங்கிருந்து எழுந்து விட்டு, அவர் அந்த இடத்தில் உட்கார விட்டு விட வேண்டும், அவருடன் தர்க்கம் செய்து கொண்டிருக்கக் கூடாது, அவ்விடத்தில் அமர அவருக்கே உரிமை உண்டு.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيل، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، قَالَ : كُنْتُ عِنْدَ أَبِي جَالِسًا وَعِنْدَهُ غُلَامٌ فَقَامَ ثُمَّ رَجَعَ ، فَحَدَّثَ أَبِيعَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ إِذَا قَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسٍ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَهُوَ أَحَقُّ بِهِ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4214

நான் என் தந்தை(யான அபூ ஸாலிஹ் (ரஹ்) அவர்கள்) உடன் அமர்ந்திருந்த போது, ஒரு சிறுவனும் எங்களுடன் அமர்ந்திருந்தான். அச்சிறுவன் அவ்விடத்திலிருந்து எழுந்து சென்று, பின் (சிறிது நேரங்கழித்து) மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான். அப்போது எனது தந்தை, அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த பின்வரும் ஹதீஸை எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். “ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சுஹைல் பின் அபூ ஸாலிஹ் (ரஹ்)
நூல்: அபூதாவூத் 4214

Narrated Suhail bin Abu Salih (rah):
I was sitting with my father and there was also a boy with us. He got up and then returned. So my father mentioned a tradition on the authority of Abuhurairah (ra) from the Prophet (sal) saying: “If anyone gets up from where he has been sitting and comes back to it, he has most right to it“.
[Abudawud 4214]

Blogger Widget