அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஸலாம் கூறுவதன் நன்மைகள்...


தினம் ஒரு ஹதீஸ்-73

حدثنا محمد بن كثير أخبرنا جعفر بن سليمانعن عوفعن أبي رجاءعن عمران بن حصين قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال عشر ون ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه فجلس فقال ثلاثون
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 5195

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல் : அபூதாவூத் 5195

Narrated Imraan ibn Husayn (ra):
A man came to the Prophet (sal) and said: “As-salaamu ‘alaykum,” and he returned the greeting, then he sat down. The Prophet (sal) said, “Ten (rewards).” Then another man came and said, “As-salaamu ‘alaykum wa rahmat-Allaah,” and he returned the greeting, then he sat down. He said, “Twenty (rewards).” Then another man came and said As-salaamu ‘alaykum wa rahmat-Allaahi wa barakaatuhu,” and he returned the greeting, then he sat down. He said, “Thirty (rewards)”.
[Abu Dawud 5195]
Blogger Widget