அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சபை ஒழுங்குகள் -2


தினம் ஒரு ஹதீஸ்-307

حَدَّثَنَا بِشْرٌ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى الْمَجْلِسِ ، فَلْيُسَلِّمْ ، فَإِذَا أَرَادَ أَنْ يَقُومَ ، فَلْيُسَلِّمْ ، فَلَيْسَ الْأَوَّلُ بِأَحَقَّ مِنَ الْآخِرِ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 6966

உங்களில் எவரேனும் ஒரு சபைக்குச் சென்றால் (அங்குள்ளவர்களுக்கு) ஸலாம் கூறட்டும். அங்கிருந்து கிளம்பி செல்ல நாடினாலும் ஸலாம் கூறட்டும். ஏனெனில் முன்னால் (ஸலாம்) கூறியது பின்னால் (எழுவதற்கும் உரித்தானதாக) ஆகாது; (சபைக்கு வரும் போது, கிளம்பும் போது ஆகிய இரு தருணங்களிலும் ஸலாம் கூற வேண்டும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 6966

Narrated AbuHurayrah (ra):
The Messenger of Allah (sal) said, “When one of you comes to an assembly, he should give a salutation and if he feels inclined to get up, he should give a salutation, for the former is not more of a duty than the latter“.
[Ahmad 6966]
Blogger Widget