அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்தல் அவசியம்…


தினம் ஒரு ஹதீஸ்-97

அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற பேரன்பு கொண்டவன், அவனிடம் மன்னிப்புக் கேட்டால், கண்டிப்பாக நம்மை மன்னித்து அரவணைப்பான் என்று அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்திருக்கும் நிலையிலேயே நாம் மரணிக்க வேண்டும். அவனை கொடூரமானவனாக கருதி விடக் கூடாது.
وَحَدَّثَنِي أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، عَارِمٌ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ، مَيْمُونٍ حَدَّثَنَا وَاصِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ مَوْتِهِ بِثَلاَثَةِ أَيَّامٍ يَقُولُ لاَ يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلاَّ وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللَّهِ عَزَّ وَجَلَّ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5517

வல்லமையும், மாண்பும் மிக்க, அல்லாஹ்வைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி)
நூல்: முஸ்லிம் 5517

Jabir bin ‘Abdullah al-Ansari (ra) reported:
I heard Allah’s Messenger (sal) say three days before his death: None of you should die but hoping only good from Allah, the Exalted and Glorious.
[Muslim 5517]
வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?
திருக்குர்ஆன் 15:56
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 12:87
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
திருக்குர்ஆன் 39:53
Blogger Widget