அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -7


தினம் ஒரு ஹதீஸ்-98

வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் உண்டு. அது எந்த நேரமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் ஹதீஸ்களில் ஒன்றை சென்ற பதிவில் பார்த்தோம். இது சம்பந்தமான மற்றொரு ஹதீஸ்:
அந்த நேரம் சம்பந்தமாக ஜுமுஆ தொழுகையில் துஆ கேட்பது போல் அன்றைய தினத்தின் அஸருக்குப் பின் கடைசி நேரத்தில் (மஃரிப் பாங்கு சொல்வதற்கு முன்) துஆ கேட்பதைச் செயல்படுத்த வேண்டும். அந்த நேரம் சம்பந்தமாக இரு அறிவிப்புகள் வந்துள்ளதால் இரண்டையும் செயல்படுத்துவதன் மூலம் அதை அடையலாம்.
أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الأَسْوَدِ بْنِ عَمْرٍو، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، – وَاللَّفْظُ لَهُ – عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنِ الْجُلاَحِ، مَوْلَى عَبْدِ الْعَزِيزِ أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ يَوْمُ الْجُمُعَةِ اثْنَتَا عَشْرَةَ سَاعَةً لاَ يُوجَدُ فِيهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ شَيْئًا إِلاَّ آتَاهُ إِيَّاهُ فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 886

ஜுமுஆ தினத்தின் பன்னிரெண்டு மணி நேர பகல் நேரத்தில், ஒரு முஸ்லிம் (துஆ ஏற்கப்படும் அந்த அரிய) நேரத்தை அடைந்து (நன்மையான) எதை கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை. அஸருக்குப் பின் இறுதி நேரத்தில் அதை தேடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அபூதாவூத் 886

It was narrated from Jabir bin ‘Abdullah (ra) that: The Messenger of Allah (sal) said: “Friday is twelve hours in which there is no Muslim slave who asks Allah for something but He will give it to him, so seek it in the last hour after ‘Asr.
[Abudawud 886]

துஆ ஏற்கப்படும் வேளைகள் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண, இங்கே கிளிக் செய்யுங்கள். 

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget